AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆடியோ லஞ்ச் தேதியை லாக் செய்த இட்லி கடை படக்குழு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Idli Kadai Movie Audio Launch: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இட்லி கடை படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறுகிறது என்பது குறித்த அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஆடியோ லஞ்ச் தேதியை லாக் செய்த இட்லி கடை படக்குழு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
இட்லி கடைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Sep 2025 11:05 AM IST

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் சேகர் கம்முலா இந்தப் படத்தை இயக்கி இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் வெளியானது. ஆனால் தமிழ் மொழியைத் தவிற மற்ற மொழியில் இந்தப் படம் வரவேற்பைப் பெற்ற நிலையில் தமிழ் மொழி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையேப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் இந்த ஆண்டில் மிகவும் அதிகமாக எதிர்பார்த்தப் படம் இட்லி கடை. இந்தப் படம் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4-வது படம் ஆகும். மேலும் இதில் நடிகர் தனுஷே நாயகனாக நடித்துள்ளதால் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். திருச்சிற்றம்பழம் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த ஜோடி கூட்டணி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரன், ஷாலினி பாண்டே, பார்த்திபன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

செப்டம்பர் 14-ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா:

கடந்த 3 நாட்களாக இட்லி கடை படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிமுக போஸ்டரைப் படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இந்த நிலையில் இட்லி கடை படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. படம் வெளியாக இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 14-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… ‘தாங்க மாட்டீங்க’ மம்முட்டியின் ஃபேமஸ் டயலாக்கை பாராட்டி தள்ளிய இயக்குநர்!

இட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கல்லூரி படத்தில் தமன்னாவை நாயகியாக தேர்வு செய்தது இப்படிதான் – இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஓபன் டாக்!

Follow Us