Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கல்லூரி படத்தில் தமன்னாவை நாயகியாக தேர்வு செய்தது இப்படிதான் – இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஓபன் டாக்!

Kalloori Movie: தமிழ் சினிமாவில் இந்த சமூகத்தின் பிரதிபலிப்பாக பலப் படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் பாலாகி சக்திவே. இவரது இயக்கத்தில் வெளியான கல்லூர் படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கல்லூரி படத்தில் தமன்னாவை நாயகியாக தேர்வு செய்தது இப்படிதான் – இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஓபன் டாக்!
கல்லூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Sep 2025 08:30 AM IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான சாமுராய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் பாலாஜி சக்திவேல் (Director Balaji Sakthivel). இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து இருந்தார். அரசு அலுவலகங்களிலும், அரசு மருத்துவமனை மற்றும் அரசு சார்ந்த இடங்களில் நடைபெறும் ஊழல்களால் மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகின்றனர் என்று முதல் படத்திலேயே மிகவும் துணிச்சலான கதையை மையமாக வைத்து படம் இயக்கி இருந்தார் பாலாஜி சக்திவேல். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தற்போது தொலைக்காட்சிகளில் இந்தப் படம் ஒளிபரப்பானாலும் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்க்கின்றனர். இப்படி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிவிந்துவிட்டார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் மாற்று சாதியில் உள்ள இருவர் திருமணம் செய்துகொண்டதால் என்ன நடந்தது என்று மிகவும் தத்ரூபமாக காட்டியிருப்பார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கல்லூரி. கல்லூரியை மையமாக வைத்து இந்தப் படம் இருக்கும் என்பதால் இது மிகவும் ஜாலியான படம் என்றுமட்டும் நினைக்க வேண்டாம். இந்தப் படத்திலும் மிகவும் சோகமான ஒரு விசயத்தை வைக்க இயக்குநர் மறக்கவில்லை.

கல்லூரி படத்தில் தமன்னாவை நடிக்க வைக்க இதுதான் காரணம்:

ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டு இருந்தது. இதில் நடிகை தமன்னா நாயகியாகவும் அவருடன் இணைந்து நடிகர்கள் அகில், பரணி, ஹேமலதா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். ஒரு குக் கிராமத்தில் இருந்து சில மாணவர்கள் ஒன்றாக கல்லூரியில் சேர்கின்றனர்.

பி.ஏ. வரலாறு பட்டப்படிப்பில் அவர்களுடன் இணைந்து பெங்களூருவில் இருந்து வந்த தமன்னாவும் படிக்கிறார். அங்கு படிக்கும் மற்ற மாணவர்களிடம் இருந்து தனித்து இருக்கும் தமன்னா இந்த கிராமத்து மாணவர்களின் நல்ல குணத்தைப் பார்த்து அவர்களுடன் நட்பாக பழகுகிறார். அதன்பின் கல்லூரி சுற்றுழா சென்ற இடத்தில் தமன்னா உட்பட 3 பேர் ஒரு பேருந்து எரிப்பு நிகழ்வில் உயிரிழந்துவிடுகிறார்கள். இது தமிழகத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகை தமன்னாவை தேர்வு செய்ய காரணம் என்ன என்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அந்த கிராமத்து மாணவர்களுக்கு நேர் எதிரான தோற்றத்தில் இருக்கும் ஒரு நபர் அந்த மாணவர்களுடன் எப்படி இணைகிறார் என்பதை காட்டுவதற்காகவே தமன்னாவை தேர்வு செய்ததாவும், தமன்னாவின் விளம்பர புகைப்படம் ஒன்றைப் பார்த்தபிறகுதான் அவரை தேர்வு செய்ததாகவும் இயக்குநர் பாலாகி சக்திவேல் தெரிவித்து இருந்தார்.

Also Read… கூலி படத்தில் தலைவர் ரஜினிகாந்த் பக்கதுல நிக்கிறதே போதும் எனக்கு – நடிகர் உபேந்திரா

தமன்னா பாட்டியாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

Also Read… லோகா சாப்டர் 1: சந்திரா படத்தின் மூத்தோன் இவர்தான்… படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!