ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவரும் பிரதர்ஸ் போல, ஆனால்… – சுஹாசினி சொன்ன விஷயம்!
Suhasini About Kamal And Rajini : தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை சுஹாசினி. இவர் இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும் ஆவார். சமீபத்தில் சைமா விருது நிகழ்ச்சியில் பேசிய இவர், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 80கள் காலகட்டத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் சுஹாசினி (Suhasini). இவர் கடந்த 1980ம் ஆண்டு வெளியான “நெஞ்சத்தை கிள்ளாதே” (Nenjathai Killathe) என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தை இயக்குநர் மகேந்திரன் இயக்கியிருந்த நிலையில், நடிகர்கள் சரத் பாபு மற்றும் பிரதாப்புடன் இணைந்து நடித்திருந்தார். சுஹாசினி, நடிகை மட்டுமல்ல, தயாரிப்பாளர், இயக்குநர், வசனகர்த்தா என பல்வேறு பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறார். இவர் நடிகர் கமல்ஹாசனின் உறவினரும் கூட. இவர் இயக்குநர் மணிரத்னத்தை (Mani Ratnam)கடந்த 1988ம் ஆண்டு காதலித்து கரம்பிடித்தார்.
சமீபத்தில் சைமா விருது வழங்கும் விழாவிலும் இவர் கலந்துகொண்டார். அப்போது கமல்ஹாசனுடன் (Kamal Haasan) மேடையில் பேசிய சுஹாசினி, “ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் கமல்ஹாசன் இருவருமே நண்பர்கள் மாதிரிதான்” என பேசியிருந்தார் . அவர் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : அல்லூ அர்ஜுன் குறித்து நெகிழ்ந்து பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து – வைரலாகும் போஸ்ட்
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குறித்து சுஹாசினி பேசிய விஷயம்
அந்த நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி, பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குறித்து பேச தொடங்கினார். அதில் அவர், ” ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருமே பிரதர்ஸ் மாதிரி இருப்பவர்கள்தான். மேலும் கமல்ஹாசன் சொன்னதில் எந்தவித மாற்று கருதும் இல்லை, ரசிகர்கள்தான் இவர்கள் இருவருக்குள் போட்டி என நினைத்துவிடீர்கள். ஆனால் இருவருமே பிரதர்ஸ் மாதிரியே இருப்பார்கள்.
இதையும் படிங்க : அப்போதுதான் அது அமரன் கையாக மாறும்.. சிவகார்த்திகேயனை புகழ்ந்த கமல்ஹாசன்!
மேலும் அவ்வப்போது ஷூட்டிங்கில் கமல்ஹாசனுக்கு விபத்துகள் ஏற்படும்போது, எனக்கு ரஜினிகாந்த் சார் போன் பண்ணுவாரு. அப்போது, “கமலுக்கு வலிக்கிறதா? என என்னிடம் கேட்பாரு. கமலுக்கு வலிக்கிறது என்று நான் சொன்னால், அப்போது அவருக்கு நிஜமாகத்தான் வலிக்கிறது” என்று என ரஜினி சொல்வார். அதுமாதிரி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருமே நெருங்கிய நண்பர்கள்” என்று நடிகை சுஹாசினி அதில் பேசியிருந்தார்.
கமல் மற்றும் ரஜினி குறித்து சுஹாசினி பேசிய வீடியோ பதிவு :
#Suhasini Recent
– #KamalHaasan and #Rajinikanth are like brothers.
– If #Kamal has any accident on the set, #Rajini sir immediately calls and asks about it.#ThugLife #Cooliepic.twitter.com/af1Npj0vxE— Movie Tamil (@_MovieTamil) September 8, 2025
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி
சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். அதில் அவரிடம் ரஜினிகாந்த்துடன் நீங்கள் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளீர்களா? என கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அசால்டாக பதிலளித்த கமல்ஹாசன் இருவரும் நடிப்பதை உறுதிபடுத்தினார். இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.