ஓடிடியில் வெளியானது கூலி படம்… ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
Coolie Movie: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான கூலி படம் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இன்று கூலி படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடிப்பில் இந்த ஆண்டு மிகவும் ரசிகர்கள் எதிர்பார்த்தப் படம் கூலி. இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்த நிலையில் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பக தயாரிப்பாளர் கலாநிதிமாறன் தயாரித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பான் இந்திய நட்சத்திரங்களான நாகர்ஜுனா, சௌபின் ஷாகிர், சத்யராஜ், உபேந்திரா ராவ், அமீர் கான், ஸ்ருதி ஹாசன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்த நிலையில் படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 4 வாரங்கள் முடிவதற்கு முன்பே படத்தை தற்போது ஓடிடியில் வெளியிட்டுள்ளது படக்குழு.




அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியான கூலி – ரசிகர்களின் விமர்சனம்:
படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்ததால் திரையரங்கிற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் வருகை இல்லை. 18 வயதிற்கு மேலே உள்ளவர்கள் மட்டும் படம் பார்க்க வேண்டும் என்பதால் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் தொடர்ந்து திரையரங்குகள் நிறைந்துவழிய அங்கு பார்வையாளர்கள் இல்லை.
இதன் காரணமாகவே படத்தை மிக விரைவாக படக்குழு ஓடிடியில் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஓடிடியில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதன்படி கூலியாக இருக்கும் ரஜினிகாந்த் தங்களை ஏமாற்றியா முதலாளி நாகர்ஜுனாவின் தந்தையை கொலை செய்கிறார்.
அப்படி ரஜினி நாகர்ஜுனாவின் தந்தையை கொலை செய்யும் போது நாகர்ஜுனா டீன் ஏஜ் பையனாக இருக்கிறார். இந்த நிலையில் படத்தில் 30 வருடங்களாக தலைமறைவாக இருக்கும் ரஜினிகாந்தின் மகள் மற்றும் நாகர்ஜுனாவின் மகன் இருவரும் ஒத்த வயது உடையவர்களாக இருப்பது பெரிய லாஜிக் மிஸ்டேக்காக உள்ளது என்று படத்தைப் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் படம் மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் படம் திரையரங்குகளில் பார்க்க தவறிவிட்டதாகவும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கூலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Coolie OST is streaming now on your favourite audio streaming platforms! 🎶🎸💥
🎵 https://t.co/jiQ42327no@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica @monishablessyb @anbariv… pic.twitter.com/6WYUtPZRev
— Sun Pictures (@sunpictures) September 11, 2025
Also Read… துல்கர் சல்மானின் 41-வது படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார்