Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரு ஆர்டினரி மேனவிட எக்ஸ்ட்ராடினரி என்ன இருக்கு – அன் ஆர்டினரி மேன் படத்தின் புரோமோ வீடியோ இதோ

Psychology of An Ordinary Man: தமிழ் சினிமாவில் சுமார் 22 ஆண்டுகளாக நடிகராக வலம் வந்த ரவி மோகன் தற்போது புது அவதாரங்களை எடுத்துள்ளார். அதன்படி அவர் தற்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என இரண்டு புதிய அவதாரங்களை எடுத்துள்ளார்.

ஒரு ஆர்டினரி மேனவிட எக்ஸ்ட்ராடினரி என்ன இருக்கு – அன் ஆர்டினரி மேன் படத்தின் புரோமோ வீடியோ இதோ
அன் ஆர்டினரி மேன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Sep 2025 18:30 PM IST

கடந்த 22 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்தவர் ரவி மோகன் (Actor Ravi Mohan). இவர் சமீபத்தில் சினிமாவில் தான் இரண்டு புதிய அவதாரங்களை எடுக்க உள்ளதாக ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். அதன்படி அவர் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இரண்டு அவதாரங்களை சினிமாவில் எடுத்துள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட நிலையில் நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் ஒன்றை மிகப் பெரிய விழாவாக நடத்தி தொடங்கினார். அதில் பிரபல்ங்கள் பலர் கலந்துகொண்டு நடிகர் ரவி மோகனின் புதிய பயணித்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் பேசிய விசயங்களும் ரசிகர்களிடையே வைரலானது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கும் முதல் படமாகன் ப்ரோ கோட் படத்தின் அறிமுக வீடியோவும் அன்றே வெளியானது. மேலும் அந்தப் படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் அர்ஜுன் அசோகன் உடன் இணைந்து நடிகர் ரவி மோகனும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகம் ஆகும் படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ரவி மோகனின் பிறந்த நாளை முன்னிட்டி படத்தின் அறிமுக வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ரவி மோகனின் அன் ஆர்டினரி மேன் படத்தின் புரமோ வீடியோ:

நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகம் ஆகும் அன் ஆர்டினரி மேன் படத்தில் நடிகர் யோகி பாபுதான் நாயகனக நடிக்கிறார். இது குறித்து ரவி மோகன் முன்பு பேட்டியிலேயே தெரிவித்து இருந்தார். நான் இயக்குநராக அறிமுகம் ஆகும் படத்தில் யோகி பாபுதான் நாயகன் என்று. அவர் சொன்னது போலவே யோகி பாபுவை வைத்து தற்போது படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் இன்று ரவி மோகன் தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவர் நடிக்கும் படங்களில் இருந்து முன்னதாக தொடர்ந்து போஸ்டர்கள் வெளியான நிலையில் தற்போது அவர் இயக்குநராக அறிமுகம் ஆகும் படத்தின் புரோமோ வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… குட் பேட் அக்லி படத்தில் வில்லனா நடிக்க ஒரே காரணம் இதுதான் – அர்ஜுன் தாஸ் சொன்ன சீக்ரெட்

அன் ஆர்டினரி மேன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர்களே பாட்டு பாடிட்டா சிங்கர்ஸ்க்கு வாய்ப்பு இல்லாம போகுதே – வைரல் பாடகர் சத்யன் சொன்ன விசயம்!