நடிகர்களே பாட்டு பாடிட்டா சிங்கர்ஸ்க்கு வாய்ப்பு இல்லாம போகுதே – வைரல் பாடகர் சத்யன் சொன்ன விசயம்!
Sathyan Mahalingam: கோலிவுட் சினிமாவில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் நபர் பாடகர் சத்யன் மகாலிங்கம். இவர் 26 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் காதலர் தினம் படத்தில் இருந்து ரோஜா ரோஜா என்ற பாடலை பாடியுள்ளார். அது சமீபத்தில் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

சமூக வலைதளத்தின் பயண்பாடுகள் இல்லாத காலத்தில் பாடல்கள் அனைத்தும் ரேடியோ அல்லது தொலைக்காட்சிகளில் போடும் போதுத்தான் மக்கள் அதிகமாக கேட்பார்கள். மேலும் அந்தப் பாடலை விட அடுத்தப் பாடல் அதிகமாக ஒலிபரப்பப்பட்டால் அது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்றாக மாறிவிடும். அதே மாதிரியான நிலை சமூக வலைதளத்தின் பயன்பாடுகள் அதிகரித்தப் பிறகும் இருக்கிறதுதான். ஆனால் இந்த சோசியல் மீடியா என்பது எத்தனை வருத்திற்கு முன்பாக நடந்த ஒரு விசயத்தையும் தற்போது நிகழ்ந்தது போல ட்ரெண்டிங்கில் இடம் பெறவும் வைக்கிறது. அப்படி 26 வருடங்களுக்கு முன்பு பாடகர் சத்யன் மகாலிங்கம் நிகழ்ச்சி ஒன்றில் பாடிய பாடலை தற்போது உள்ள இளைஞர்கள் இணையத்தில் கொண்டாடி வைரலாக்கியது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் கதிர் எழுதி இயக்கி கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் காதலர் தினம். இந்தப் படத்தில் இயக்குநர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல் ரோஜா ரோஜா. படத்தில் இந்தப் பாடலை பாடகர் உன்னி கிருஷ்ணன் பாடியுள்ளார். இந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் சத்யன் மகாலிங்கம் ரோஜா ரோஜா பாடலைப் பாடியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியான நிலையில் பலரும் ஒரிஜினல் பாடல் போலவே உள்ளது என்று அவரைப் பாராட்டி வந்தனர். இதற்கு நன்றி தெரிவித்த பாடகர் சத்யன் மகாலிங்கம் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தற்போது வாய்ப்புகள் இல்லாதது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.




நடிகர்களே பாடிவிட்டால் பாடகர்களுக்கு எங்கு வாய்பு இருக்கு:
ரோஜா ரோஜா பாடல் வைரலான பிறகு பாடகர் சத்யன் மகாலிங்கத்தை பல யூடியூப் சேனல்களும் கண்டுபிடித்து பேட்டிகளை எடுத்து வருகின்றது. அதில் ஒரு பேட்டியில் பேசிய பாடகர் சத்யன் மகாலிங்கம் சினிமாவில் 200 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளேன். ஆனால் கொரோனாவிற்கு பிறகு வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறே.
பாட வாய்ப்பு இல்லாமல் ஹோட்டலுக்கு கூட வேலைக்கு சென்றேன் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தற்போது எல்லாம் நடிகர்களே அவர்கள் நடிக்கும் படங்களில் பாடல்களை பாடிவிடுகிறார்கள். அவர்கள் அதை செய்யவில்லை என்றாலும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நடிகர்கள் பாடவேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார்கள். இதனால் பாடகர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகின்றது என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளர். இது ரசிகர்களிடையே கவனத்தப் பெற்று வருகின்றது.
சத்யன் மகாலிங்கம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… ஆசை படத்திலேயே ’தல’யாக மாறிவிட்டார் அஜித் – இயக்குநர் வசந்த் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!