ஆசை படத்திலேயே ’தல’யாக மாறிவிட்டார் அஜித் – இயக்குநர் வசந்த் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
30 Years of Aasai Movie: நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ஆசை. இந்தப் படத்தில் இருந்தே அஜித் தல என்ற பட்டத்திற்கு தகுதியானவராக மாறிவிட்டார் என்று இயக்குநர் வசந்த் பேட்டி ஒன்றில் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் அஜித் குமார் (Actor Ajith Kumar). இவர் நடிகராக அறிமுகம் ஆன அமராவதி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வெளியான படம் ஆசை. இந்தப் படத்தை இயக்குநர் வசந்த் எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அஜித் உடன் இணைந்து நடிகர்கள் சுவலட்சுமி, பிரகாஷ் ராஜ், ரோகிணி, பூர்ணம் விஸ்வநாதன், நிழல்கள் ரவி, வடிவேலு, பூஜா பத்ரா, வீரராகவன், பயில்வான் ரங்கநாதன், தாமு, மகாநதி சங்கர், குட்டி ஆனந்த், எஸ்.ஜே. சூர்யா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்தை ஆலயம் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர்கள் மணிரத்னம் மற்றும் எஸ். ஸ்ரீராம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 30 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் படத்தின் இயக்குநர் வசந்த் அஜித் குமார் குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




ஆசை படத்தில் அந்த காட்சியில் அஜித் குமாருக்கு அப்படி ஒரு கைதட்டு கிடைத்தது:
இந்த நிலையில் ஆசைப் படத்தில் நாயகன் அஜித் குமாருக்கும் வில்லன் பிரகாஷ் ராஜிற்கும் இடையே நடந்த காட்சிக் குறித்து பேசியுள்ளார். அதில் பிரகாஷ் ராஜிற்கு எதிராக நடிகர் அஜித்குமார் பேசிய வசனத்திற்கு திரையரங்குகளில் அதிகப்படியாக கைத்தட்டுகள் கிடைத்ததாகவும் அப்போவே அஜித்திற்கு தல அந்தஸ்த் கிடைத்துவிட்டது என்று இயக்குநர் வசந்த் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
Also Read… கூலி படத்தில் தலைவர் ரஜினிகாந்த் பக்கதுல நிக்கிறதே போதும் எனக்கு – நடிகர் உபேந்திரா
வைரலாகும் இயக்குநர் வசந்தின் வீடியோ:
வசந்த : ஆசை படத்தில் ஹோட்டல் சீன்ல அஜித் சார் பிரகாஷ்ராஜ் பார்த்து நீங்க ஏன் என்னோட பர்ஸ் எடுத்து இருக்க கூடாது அதுக்கு எல்லா ஊர்லயும் எல்லா தியேட்டர்ல செம கைதட்டல் அப்பவே அஜித்குமார் தலய உருவெடுத்துட்டார் …..#AjithKumar#30yearsofaasaipic.twitter.com/MmblXpl3Lr
— Joe Selva (@joe_selva1) September 8, 2025
Also Read… இயக்குநர் பாலாவிற்கு நன்றி சொல்ல வேண்டும் – ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்