Blackmail Movie : அதிரடி திரில்லர் கதை.. ஜி.வி. பிரகாஷின் பிளாக்மெயில் படத்தின் ஸ்னீக் பீக் இதோ!
Blackmail Movie Sneak Peek : நடிகர் ஜி. வி.பிரகாஷின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம் பிளாக்மெயில். இந்த படமானது திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளை செய்து வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar). இவரின் நடிப்பில் இந்த 2025 செப்டம்பர் 12 ஆம் தேதியில் வெளியாகவுள்ள படம் பிளாக்மெயில் (Blackmail). இந்த படத்தை அறிமுக இயக்குநர் மு. மாறன் (Mu. Maran) இயக்க, ஜே.டி.எஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ளார். இதில் ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக தேஜு அஷ்வினி (Teju Ashwini) நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் நடிகர்கள் ஸ்ரீகாந்த், பிந்துமாதவி, பாலா சரவணன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும், நிலையில், எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக படக்குழு, பிளாக்மெயில் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை நடிகர் ஜி. வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க : கவினின் கிஸ் பட டிரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பு
ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட பிளாக்மெயில் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ
My next film #blackmail sneak peak for u all do watch https://t.co/hpST84uQFf in theatres from this weekend September 12th
— G.V.Prakash Kumar (@gvprakash) September 8, 2025
பிளாக்மெயில் படத்திற்காக பாதி சம்பளத்தை குறைத்த ஜி.வி. பிரகாஷ்
நடிகர் ஜி.வி.பிரகாஷின் இந்த பிளாக்மெயில் படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இந்த படத்தில் நடிப்பதற்கு ஜி.வி. பிரகாஷ் சுமார் ரூ 15 கோடிகளை சம்பளமாக வாங்கியிருந்த நிலையில், படமானது பாதியில் பட்ஜெட் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் தனது சம்பளத்தில் பாதி தொகையை மீண்டும் படக்குழுவிற்கு கொடுத்து உதவியதாக கூறப்படுகிறது. இது குறித்து பிளாக்மெயில் பட தயாரிப்பாளர் கூறியிருந்தார். இது குறித்து ஜி.வி. பிரகாஷ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது.
இதையும் படிங்க : மெய்யழகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான சைமா விருதை வென்றார் கார்த்தி
ஜி.வி. பிரகாஷின் புதிய திரைப்படம் :
ஜி.வி. பிரகாஷ் குமார் பிளாக்மெயில் படத்தை தொடர்ந்து, இசையமைப்பாளாராக ஒப்பந்தமான படங்கள் பல இருந்தாலும், நடிப்பையும் ஒருபுறம் நிறுத்தாமல் நடித்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ். இவர், செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் என்ற படத்திலும், மேலும் இமார்டல், இடிமுழக்கம், அடங்காதே போன்ற பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.