மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு தனுஷ்கோடினு பெயர் வைக்க இதுதான் காரணம் – இயக்குநர் வெங்கட் பிரபு ஓபன் டாக்!
Director Venkat Prabhu: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் முன்னதாக வெளியான மாநாடு படத்தில் வில்லனாக நடித்த நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு தனுஷ்கோடி என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு (Director Venkat Prabhu) இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மாநாடு. சினிமாவில் நீண்ட நாட்களாக வெற்றியைப் பெற முடியாவில் இருந்த நடிகர் சிம்புவிற்கு மாபெரும் கம்பேக்காக இந்தப் படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த 25-ம் தேதி நவம்பர் மாதம் 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் நடிகர் சிம்பு உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன், சுப்பு பஞ்சு, அஞ்சேனா கீர்த்தி, உதயா, அரவிந்த் ஆகாஷ், டேனியல் அன்னி போப், ஸ்டண்ட் சில்வா, படவா கோபி, சிங்கப்பூர் பாலா, அருண் மோகன், கிருபா, மஹத் ராகவேந்திரா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்தை வி ஹவுஸ் புரடெக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். மேலும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.




வில்லன்னா ஒரு பவர்ஃபுல் பெயர் இருக்கனும்:
இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியபோது இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் மாநாடு படத்தில் சிம்புவிற்கு வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு தனுஷ்கோடி என்று பெயர் வைக்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு வில்லன்னா ஒரு பவர்ஃபுல் பெயர் இருக்கனும்ல.
தனுஷ் சிம்பு இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால் அவர்கள் ரசிகர்களுக்கு இடையே ஒரு போட்டி இருக்கு. அதுக்காகதான் சிம்புவிற்கு வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யாவிற்கு தனுஷ்கோடினு பெயர் வைத்தேன் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
Also Read… கல்லூரி படத்தில் தமன்னாவை நாயகியாக தேர்வு செய்தது இப்படிதான் – இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஓபன் டாக்!
இணையத்தில் வைரலாகும் வெங்கட் பிரபுவின் பேச்சு:
𝚃𝚑𝚎 𝙿𝚘𝚠𝚎𝚛𝚏𝚞𝚕 𝙽𝚊𝚖𝚎, 𝚝𝚑𝚎 𝙽𝚊𝚖𝚎 𝙸𝚜 ‘𝘿𝙝𝙖𝙣𝙪𝙨𝙝’ 💥
Global Star @dhanushkraja 🛐#IdlyKadai
pic.twitter.com/u6xrYjqv1f— RajuDfan (@RajuVaradhan201) September 8, 2025
Also Read… ‘தாங்க மாட்டீங்க’ மம்முட்டியின் ஃபேமஸ் டயலாக்கை பாராட்டி தள்ளிய இயக்குநர்!