சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபுவின் கூட்டணி குறித்து வெளியான மாஸ் அப்டேட்!
Sivakarthikeyan New Movie Update : இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் தி கோட். தளபதி விஜய்யின் இந்த படத்தை தொடர்ந்து, மேலும் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் இணையவுள்ளதாக அறிவித்திருந்தார். தற்போது இப்படத்திலிருந்து சிறப்பான அப்டேட் வெளியாகியுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை மாஸ் நடிகர்களின் படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு (Venkat Prabhu). பல கேங்ஸ்டர் கதைக்களத்துடன் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (The Greatest of All Time). தளபதி விஜயின் 68வது திரைப்படமாக இந்த படம் வெளியானது. கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி இப்படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இப்படமானது சுமார் ரூ 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்ததாகவும் கூறபடுகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளதாக தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவியது. அதனை சமீபத்தில் ஒரு பட நிகழ்ச்சியில் உறுதி செய்து இருந்தார் இயக்குநர் வெங்கட்பிரபு. மேலும் இப்படத்தின் அப்டேட் வெகு விரைவில் வெளியாகவும் என கூறியிருந்தார்.




அதை தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் சிறப்பான அப்டேட்டை கொடுத்துள்ளார். வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் (Sathya Jyothi Films) நிறுவனம் தயாரிப்பதாக, அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் (T.G.Thiagarajan) அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : புஷ்பா 3 படம்.. இயக்குநர் சுகுமார் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்!
தலைவன் தலைவி படம் குறித்து சத்யஜோதி நிறுவனம் வெளியிட்ட பதிவு :
The ultimate family blockbuster, now Trending Worldwide on Amazon Prime Video 💥#ThalaivanThalaivii @PrimeVideoIN@VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @iYogiBabu@Music_Santhosh @SathyaJyothi @Lyricist_Vivek @thinkmusicindia @studio9_suresh@Roshni_offl @kaaliactor… pic.twitter.com/grfDDh4Uw3
— Sathya Jyothi Films (@SathyaJyothi) August 29, 2025
சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணி :
நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மற்றும் விஜயின் நடிப்பில் வெளியான கோட் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் துப்பாக்கியை கொடுத்த காட்சியானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தாலும், விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிங்க : மக்களை ஈர்க்கும் படம்.. மதராஸி படத்துக்கு ஷங்கர் வாழ்த்து!
இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயனின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஆக்ஷன் வேடத்தில் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் மதராஸி பட வரவேற்பு :
சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸின் கூட்டணியில் வெளியான படம் மதராஸி. இப்படமானது கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படமானது ஆக்ஷ்ன் மற்றும் காதல் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இதில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் ரசிக்கப்பட்டாலும், வில்லனாக நடிக வித்யுத் ஜாம்வாலின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.