Keerthy Suresh: அந்த காட்சியை பார்த்ததும் புல்லரித்துவிட்டது.. கீர்த்தி சுரேஷ் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
Keerthy Suresh About Mahanati Premiere Experience : பான் இந்திய நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் மகாநதி படம் வெளியான முதல் நாளில் நடந்த சம்பவம் பற்றி பேசியுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh), தமிழ் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நாயகன்கள் பலருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவாறு தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருக்கிறார். மலையாள சினிமாவின் மூலம் படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது,இது என்ன மாயம் (Idhu Enna Maayam). கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அசத்தல் காமெடி மற்றும் காதல் கதைக்களத்துடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
மேலும் இவர் முதன் முதலில் நடித்த பெண் லீட் கதாபாத்திரம் படம்தான் மகாநதி (Mahanati). நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், மகாநதி படத்தை முதல் நாள், முதல் காட்சியில் பார்த்தபோது இருந்த அனுபவம் குறித்து பேசியிருந்தார்.




இதையும் படிங்க : மதராஸி படத்தின் காட்சிகள் இணையத்தில் ரிலீஸ்.. எச்சரித்த படக்குழு!
நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்பட பதிவு :
View this post on Instagram
மகாநதி படம் குறித்து முதல்நாள் காட்சி பற்றி பேசிய கீர்த்தி சுரேஷ்:
அந்த நேர்காணலில் நடிகை கீர்த்தி சுரேஷ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர், மகாநதி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு நான் எனது குடும்பத்துடன் திரையரங்கு சென்றிருந்தேன். அப்போது என்னுடைய கார் ட்ரைவர் சொன்னாரு, நமது முன்பு செல்லும் கார் இயக்குநர் ராஜமௌலியோடது என்று எனக்கு உடனே திக்கு திக்கு என்று ஆகிவிட்டது. நான் படம் பார்க்க போன தியேட்டரில் 6 ஸ்கிரீன் இருக்கிறது. முதல் நாளில் அதுவும் 8 மணி ஷோவில் ஒரு பெண் லீட் கதாபாத்திரத்தின் படத்திற்கு அந்த 6 ஸ்க்ரீனும் அனைத்தும் நிறைந்திருந்ததாக தியேட்டர் ஓனர் சொன்னாரு.
இதையும் படிங்க : பெயருக்கு முன்னாள் அடைமொழி வருவது எனக்கு பிடிக்கவில்லை – சூர்யா ஓபன் டாக்!
தியேட்டருக்கு உள்ளே சென்றதும் எனக்கும் பயம் வந்துவிட்டது. எனது குடும்பத்தை, நடுவில் உட்காரவைத்துவிட்டு நான் ஒரு ஓரமாக திரையரங்கில் சென்று உட்காந்திருந்தேன். படம் ஆரம்பித்ததும் துல்கர் சல்மானின் அறிமுக காட்சி, அதற்கு கைதட்டல் எல்லாம் இருந்தது. பின் சமந்தாவின் அறிமுக காட்சியை சொல்லவே வேண்டாம் அவ்வளவு கைதட்டல் இருந்தது.
எனது காட்சிக்கும் இருந்தது. இது எல்லாத்தையும் தாண்டி, அதிகமான கைதட்டலும் மற்றும் விசிலும் வந்தது அந்த மகாநதி என்ற டைட்டில் காட்சிதான். எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் அதில் ஓபனாக பேசியிருந்தார்.