Madharaasi : மதராஸி படத்தின் காட்சிகள் இணையத்தில் ரிலீஸ்.. எச்சரித்த படக்குழு!
Madharaasi Movie Crew Warning : நடிகர் சிவகார்த்திகேயனின் முன்னணி நடிப்பில் வெளியான திரைப்படம் மதராஸி. இது கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. இந்த படத்தின் அனுமதியில்லாமல் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவது குறித்து படக்குழு எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸின் (AR.Murugadoss) இயக்கத்தில் சுமார் 5 வருடங்களுக்கு பின், தமிழில் வெளியாகியிருக்கும் படம்தான் மதராஸி (Madharaasi). இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன், மற்றும் ஆழ்ந்த காதல் போன்ற கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்திருந்தார். இந்த ஜோடி இப்படத்தில்தான் முதன் முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது மதராஸி படக்குழு எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், மதராஸி திரைப்படத்தின் காட்சிகளையும், புகைப்படங்களையும் இணையத்தில் உரிமை இல்லாமல் வெளியிடுவது குறித்து படக்குழு எச்சரித்துள்ளது. சமூக ஊடகங்களில் மதராஸி படம் தொடர்பான காட்சிகள் பதிவு செய்யப்பட்டுவரும் நிலையில், படக்குழுவின் அனுமதியில்லாமல் எந்த பதிவையும் வெளியிடக்கூடாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் படக்குழு எச்சரிக்கை செய்துள்ளது.




இதையும் படிங்க : அப்போதுதான் அது அமரன் கையாக மாறும்.. சிவகார்த்திகேயனை புகழ்ந்த கமல்ஹாசன்!
மதராஸி படக்குழு வெளியிட்ட எச்சரிக்கை பதிவு
Watch #Madharaasi in cinemas.
Kindly refrain from sharing unauthorized pictures and making videos from the film. pic.twitter.com/0ji8VplPbM
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) September 8, 2025
மதராஸி திரைப்படத்தின் வசூல் விவரம் :
இந்த மதராஸி திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்தார். அவருக்கு இணையாக நடித்திருந்த ருக்மிணி வசந்தின் மாலதி என்ற கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. அமரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் முற்றிலும் ஆக்ஷன் நிறைந்த படமாக மதராஸி அமைந்திருந்தது.
இதையும் படிங்க : மல்லிகைப்பூ வைத்ததால் ரூ.1.14 லட்சம் அபராதம்.. ஷாக் தகவலை சொன்ன மலையாள நடிகை!
இப்படமானது முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ 12.8 கோடிகளை வசூல் செய்திருந்தது. மேலும் இரண்டாவது நாள் வசூலில் உலகளவில் சுமார் ரூ 50 கோடிகளை வசூல் செய்திருந்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இது குறித்த தகவலும் வைரலாகி வருகிறது.
மதராஸி படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த பதிவு :
சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்தின் நடிப்பில், காதல் மற்றும் ஆக்ஷ்ன் கலந்த கலவையாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படமானது திரையரங்குகளை தொடர்ந்து எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மதராஸி சுமார் 6 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதனால் வரும் அக்டோபர் மாதத்தில் 2வது வாரத்தில் இப்படமானது அமேசன் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.