Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகை காஜல் அகர்வாலுக்கு விபத்தா? வைரலாகும் எக்ஸ் போஸ்ட்

Actress Kajal Aggarwal: நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக இணையத்தில் தொடர்ந்து வதந்திகள் பரவி வந்த நிலையில் நடிகையே தனது எக்ஸ் தள பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த எக்ஸ் தள பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகை காஜல் அகர்வாலுக்கு விபத்தா? வைரலாகும் எக்ஸ் போஸ்ட்
நடிகை காஜல் அகர்வால்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Sep 2025 13:13 PM IST

இந்தி சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான கியூன்! ஹோ கயா நா… என்ற படத்தின் ஒரு சிரிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் காஜல் அகர்வால் (Kajal Aggarwal). இதனைத் தொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான லக்‌ஷ்மி கல்யாணம் என்ற படத்தின் மூலம் நாயகியாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நாயகியாக நடித்துவந்த நடிகை காஜல் அகர்வால் தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். பின்பு தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ரவி மோகன் என பலருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் தமிழ் சினிமா பக்கம் எட்டிப்பாக்காத நடிகை காஜல் அகர்வால் நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு சினிமாவில் வெளியான கண்ணப்பா படத்தில் கடவுள் சிவனாக நடித்த அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக கடவுள் பார்வதி வேடத்தில் நடித்து இருந்தார். இவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும்  இவரது நடிப்பில் தற்போது அடுத்தடுத்துப் படங்கள் வெளியாக காத்திருக்கின்றது.

உயிரிழந்துவிட்டதாக பரவும் வதந்திக்கு நடிகை காஜல் அகர்வாலின் ரிப்ளை:

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவிவந்தது. இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை காஜல் அகர்வால் தனது எக்ஸ் தள பதிவில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் ஒரு விபத்தில் சிக்கியதாக (இப்போது இல்லை!) கூறும் சில ஆதாரமற்ற செய்திகளை நான் கண்டேன், உண்மையைச் சொன்னால், அது மிகவும் காமெடியாக இருக்கிறது, ஏனெனில் அது முற்றிலும் பொய்யானது.

கடவுளின் அருளால், நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன், பாதுகாப்பாக இருக்கிறேன், மிகவும் நன்றாக இருக்கிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். இதுபோன்ற தவறான செய்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று நான் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… அனஸ்வரா ராஜனின் பர்த்டே ஸ்பெஷல்… கேக் வெட்டி கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்

நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பராசக்தி படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்… உறுதி செய்த சிவகார்த்திகேயன்