Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அனஸ்வரா ராஜனின் பர்த்டே ஸ்பெஷல்… கேக் வெட்டி கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்

Anaswara Rajan: மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனஸ்வரா ராஜன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை அனஸ்வராவின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அனஸ்வரா ராஜனின் பர்த்டே ஸ்பெஷல்… கேக் வெட்டி கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்
அனஸ்வரா ராஜனின் பர்த்டே கொண்டாட்டம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Sep 2025 20:31 PM IST

மலையாள சினிமாவில் ஹிட் நடிகையாக வலம் வருபவர் நடிகர் அனஸ்வரா ராஜன் (Actor Anaswara Rajan). இவர் மலையாள சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான உதாஹரணம் சுஜாதா என்ற படத்தில் நடித்தன் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் வெளியான தண்ணீர் மதன் தினங்கள், அதியராத்திரி, வாங்கு, சூப்பர் சரண்யா, அவியல், மைக், விசுதா மெஜோ என தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்தார். பின்பு 2022-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான ராங்கி என்ற படத்தில் நடத்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரிச்சையமானார். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா முன்னணி வேடத்தில் நடித்து இருந்த நிலையில் அவரது அண்ணன் மகளாக நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் மலையாள சினிமாவில் நடிகை அனஸ்வரா நடிப்பில் பிரணய விலாசம், நேரு, ஆபிரகாம் ஓஸ்லர், இந்தியாவைச் சேர்ந்த மலையாளி, குருவாயூர் அம்பலநடையில், ரேகாசித்திரம், என்னு ஸ்வாந்தம் புண்யாலன், பைங்கிளி, வியாசனசமேதம் பந்துமித்ராதிகள் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகயாக வலம் வரும் அனஸ்வரா ராஜன் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்.

படக்குழுவினருடன் மகிழ்ச்சியாக பிறந்த நாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன்:

இந்த நிலையில் தமிழில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகம் ஆகும் படத்தில் நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மதன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை அனஸ்வரா ராஜன் இன்று 08-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு அவரது 23-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படங்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read… மல்லிகைப்பூ வைத்ததால் ரூ.1.14 லட்சம் அபராதம்.. ஷாக் தகவலை சொன்ன மலையாள நடிகை!

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பராசக்தி படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்… உறுதி செய்த சிவகார்த்திகேயன்