தமிழ்நாடே அதிர்ந்த சம்பவம்.. நிஜ கதையை கையிலெடுக்கும் ஞானவேல்.. நடிகராக மலையாள சூப்பர் ஸ்டார்!?
Director TJ Gnanavel: தமிழ் சினிமாவில் சமூகம் சார்ந்த படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் டிஜே ஞானவேல். இவர் தற்போது ஒரு உண்மை கதையை மையமாக வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கூட்டத்தில் ஒருத்தன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் டிஜே ஞானவேல் (Director T. J. Gnanavel). ரொமாண்டிக் காமெடி ஜானரில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாகவும் நடிகை பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்து இருந்தனர். தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே டிஜே ஞானவேலுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படம் ஜெய் பீம். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர்கள் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஷ், ரஜிஷா விஜயன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
தமிழகத்தில் நடந்த லாக்கப் மரணத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படம் கொரோனா காரணமாக நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே மாபெரும் பாராட்டைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் டிஜே ஞானவேல் மூன்றாவதாக வேட்டையன் படத்தை இயக்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்தப் படம் என்கவுண்டர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் பலர் நடித்து இருந்தனர். படம் கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை இயக்கும் டிஜே ஞானவேல்?
இந்த நிலையில் இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி 123 தெலுங்கு பத்திரிகை வெளியிட்ட செய்தியின் படி தமிழகத்தில் தோசை மன்னன் என்று அறியப்படும் சரவண பவன் நிறுவனர் ராஜகோபாலின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலைக் குற்றச்சாட்டில் தொழிலதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… காமெடிக்கு பஞ்சம் இல்லாத இந்த குருவாயூர் அம்பலனடையில் படத்தை பார்க்க தவறாதீர்கள்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Director #TJGnanavel Narrated his long pending #DosaKing project to #Mohanlal & the project may get materialized this time🤞
Real Life story of Saravana Bhavan Founder Rajagopal who was sentenced to life imprisonment on charges of Murder💥 pic.twitter.com/w8sveksM0f
— AmuthaBharathi (@CinemaWithAB) September 6, 2025
Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் இவர்களா? இணையத்தில் வைரலாகும் பட்டியல்!