Ajith Kumar : Never.. Ever.. Give Up.. 8 வருடங்களை நிறைவு செய்த அஜித் குமாரின் விவேகம்..!
8 Years Of Vivegam : நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் கடந்த 2017ம் ஆனது வெளியான திரைப்படம் விவேகம். இப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இந்நிலையில், இன்றுடன் இந்த படம் வெளியாகி சுமார் 8 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் படக்குழு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் இதுவரை சுமார் 63 படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் முன்னணி நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் விவேகம் (Vivegam). இப்படத்தை பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா (Siva) இயக்கியிருந்தார். இந்த படத்தில் தல அஜித் குமார் முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் (Kajal Aggarwal) இணைந்து நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அஜித் குமார் சிடிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் கருணாகரன், அக்ஷரா ஹாசன், பாரத் ரெட்டி, ஆரவ் சௌத்ரி உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்திருந்தார். கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதியில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்ற சுமார் ரூ 160 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்நிலையில், இந்த 2025 ஆண்டோடு சுமார் 8 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதை கொண்டாடும் விதத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது மோனிகா பாடல்
அஜித் குமாரின் விவேகம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Never. Ever. Give Up. 💪💥 Celebrating 8 Years of AK’s Pure Mass, Action & Style – #8YearsOfVivegam 🔥#AjithKumar @directorsiva @MsKajalAggarwal @anirudhofficial @vivekoberoi #Vivegam #AjithKumar #AnirudhRavichander #SathyaJyothiFilms pic.twitter.com/JZOmxas8YA
— Sathya Jyothi Films (@SathyaJyothi) August 24, 2025
அஜித் குமாரின் விவேகம் திரைப்படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்..?
நடிகர் அஜித் குமாரின் இந்த விவேகம் படமானது அதிரடி ஆக்ஷ்ன் , காதல் மற்றும் சீக்கிரட் மிஷன் போன்ற மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த ஜோடி இப்படத்தின் மூலம்தான் முதன் முறையாக இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இட்லி கடை படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
இந்த படமானது 8 ஆண்டுகளுக்கு முன்னே கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்நிலையில், 8 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த திரைப்படத்தை இந்த விவேகம் திரைப்படமானது சன் நெக்ஸ்ட் ஓடிடி மற்றும் ஏர்டெல் எக்ஸ் ஸ்ட்ரீம் போன்ற ஓடிடி இணையதளங்களில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் குமாரின் புதிய திரைப்படம் :
நடிகர் அஜித்தின் நடிப்பில் இறுதியை வெளியானது குட் பேட் அக்லி . இப்படத்தை அடுத்ததாக மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன்தான் அஜித் குமார் படம் நடிக்கவுள்ளார். தற்போது இப்படமானது AK64 என அழைக்கப்பட்டு வரும் நிலையில், இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தின் நடிகை ஸ்வாசிகாவும் நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.