Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எல்லா பெருமையும் லோகேஷ் கனகராஜைதான் சேரும் – நெகிழ்ந்து பேசிய டான்ஸ் மாஸ்டர் சாண்டி

Dance Master Sandy: கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே நடன இயக்குநராக அறிமுகம் ஆகி பல பாராட்டுகளைப் பெற்றவர் நடன இயக்குநர் சாண்டி. இவர் தற்போது படங்களில் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எல்லா பெருமையும் லோகேஷ் கனகராஜைதான் சேரும் – நெகிழ்ந்து பேசிய டான்ஸ் மாஸ்டர் சாண்டி
டான்ஸ் மாஸ்டர் சாண்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Sep 2025 12:08 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான் ஆ என்ற படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகம் ஆனார் சாண்டி (Dance Master Sandy). தொடர்ந்து பலப் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வந்த இவர் அவ்வபோது டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வந்தார். 2014-ம் ஆண்டு சினிமாவில் நடன இயக்குநராக எண்ட்ரி கொடுத்து இருந்தாலும் இவரை தமிழக மக்களிடையே அதிகம் பிரபலம் ஆக்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் சாண்டி போட்டியாளராக கலந்துகொண்டு தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தா. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 8 சீசன்கள் முடிந்து இருந்தாலும் மக்களுக்கு மிகவும் பிடித்த சீசன் எது என்று கேட்டால் பெரும்பாலான சாண்டி இருந்த சீசன் தான் எங்களுக்கு பிடிக்கும் என்று தெரிவிப்பார்கள்.

அது 3வது சீசன் என்பதை கூட அடையாளப் படுத்தாமல் சாண்டி சீசன் என்றே மக்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர். அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு சாண்டியின் சினிமா வாழ்க்கையும் மாறியது என்றே சொல்லலாம். தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. பல ஹிட் படங்களில் சாண்டி நடன இயக்குநராக பணியாற்றி வந்தார்.

லோகா படத்திற்கு வாய்ப்பு கிடைத்ததே லியோ படத்தால் தான்:

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டு ஒன்றில் கலந்துகொண்ட சாண்டி மலையாள சினிமாவில் அவர் நடித்து சமீபத்தில் வெளியான லோகா படத்திற்கு கிடைத்த வாய்ப்பு குறித்து பேசியுள்ளார். அதில் லியோ படத்தில் வில்லனா நடிச்சத பார்த்த லோகா படக்குழு அந்தப் படத்தில் நடிக்க கேட்டதாக தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக எல்லா பெருமையும் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜையே சாரும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான லோகா சாப்டர் 1 சந்திரா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சாண்டி காவல் துறை அதிகாரியாக நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

Also Read… மெய்யழகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான சைமா விருதை வென்றார் கார்த்தி

இணையத்தில் கவனம் பெறும் சாண்டி பேச்சு:

Also Read… ரஜினிகாந்த் – கமல் ஹாசன் ஒன்னா நடிச்சப் படங்கள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் இதோ