மை காட்.. எக்ஸலன்ட்… மதராஸியை பாராட்டிய சூப்பர் ஸ்டார் – மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்
Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்களுக் பிரபலங்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மதராஸி படத்தைப் பார்த்துவிட்டு தன்னை பாராட்டியதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 5-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கி இருந்தார். ஆக்ஷன் ரொமாண்டிக் பாணியில் வெளியான இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை தெரிவித்து வந்தனர். சிலர் படம் நன்றாக இருக்கிறது 5 வருடங்களுக்கு பிறகு தமிழில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறபான அனுபவமாக இருந்தது என்று கருத்து தெரிவித்தனர். சிலர் மதராஸி படம் சுமாராகவே உள்ளது. படக்குழு கொடுத்த எதிர்பார்ப்புக்கு படம் பூர்த்தியாகவில்லை என்றும் சிவகார்த்திகேயனுக்கு இது சூப்பர் ஹிட் படம் இல்லை என்றும் தங்களது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்தனர்.
தொடர்ந்து படம் தொடபாக பல விமர்சனங்கள் வந்தாலும் படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் படத்தில் நடித்த நாயகன் சிவகார்த்திகேயனைவிட வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மதராஸி படத்தில் அவரது ஆக்ஷன் காட்சிகள் மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். துப்பாக்கியில் விஜயின் வில்லனாக நடித்த இவர் தற்போது மதராஸி படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக பாராட்டி வந்தனர்.




மதராஸி படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த் – சிவகார்த்திகேயன் சொன்ன விசயம்:
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு போன் செய்து மதராஸி படத்தை பார்த்ததாகவும் படம் மிகவும் சூப்பராக உள்ளது என்று அவரை வாழ்த்தியதாகவும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் தனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது என்றும், ஆக்ஷன் ஹீரோ ஆகிட்டீங்க எஸ்.கே வாழ்த்த்குகள் காட் ப்ளஸ் என்று வாழ்த்தியதாகவும் சிவகார்த்திகேயன் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகின்றது.
சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Just received the appreciation for #Madharaasi from my idol, my Thalaivar #Superstar @rajinikanth sir 😍
“My god, excellent!
Enna performance!
Enna actions!
Super super SK!
Enakku romba pudichirundhadhu.
Action hero aagiteenga.
God bless, God bless.”Heartfelt wishes from my…
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 10, 2025
Also Read… ஆசை படத்திலேயே ’தல’யாக மாறிவிட்டார் அஜித் – இயக்குநர் வசந்த் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!