ஐஸ்வர்யா ராய் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Aishwarya Rai Bachchan : இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தனது அழகில் சொக்க வைத்த நடிகை ஐஸ்வர்யா ராய் பட்சனின் புகைப்படத்தையும் பெயரையும் சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் (Aishwarya Rai Bachchan) தனது புகைப்படங்கள் மற்றும் பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாகவும், ஏஐ மூலமாக மாற்றப்பட்ட புகைப்படங்களை வைத்து நான் அவர்களுடன் நெருக்கமாக உள்ளது போல சிலர் ஏமாற்றி வருவதாகவும் கூறி இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், பல ஆன்லைன் வலைதளங்கள் தங்களது பொருட்களை விற்பனை செய்யவும் பல்வேறு காரணங்களுக்காக நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை ஏஐ மூலம் மார்ஃபிங் செய்து எந்தவித அனுமதி பெறாமல் பயன்படுத்தும் வலைதளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று 09-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு செவ்வாய் கிழமை நீதிபதி தேஜாஸ் கரியாவின் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சந்தீப் சேத்தி ஐஸ்வர்யா ராய் பச்சனின் அனுமதி இல்லாமல் அவரின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தும் வலைதளங்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து விளக்கமாக பேசினார். மேலும் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு அறிமுகமே இல்லாத நபர்கள் அவர்களின் நிறுவத்துடனும் அவர்களுடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக இருப்பதுபோல புகைப்படங்களை ஏஐ மூலம் உருவாக்கி பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.




ஐஸ்வர்யா ராய் வழக்கில் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு:
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தேஜாஸ் கரியா வழக்கின் வாதத்தை கேட்டு முடித்தவுடன் பல்வேறு நோக்கங்களுக்காக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் புகைப்படம் மற்றும் பெயரை தவறாக பயன்படுத்தும் வலைதளங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக தடை உத்தரவு பிரப்பித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகின்ற 18-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டிற்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் இந்த வழக்கின் அன்று இறுதி தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… ஆசை படத்திலேயே ’தல’யாக மாறிவிட்டார் அஜித் – இயக்குநர் வசந்த் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!