3 ஆண்டுகளை நிறைவு செய்தது ஷர்வானந்த் நடிப்பில் வெளியான கணம் படம்
3 Years Of Kanam Movie: நடிகர் ஷர்வானந்த் நாயகனாக நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவான படம் கணம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்ததாக தற்போது படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி சயின்ஸ் ஃபிக்ஷன் மெலோட்ராமாவாக வெளியான படம் கணம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படம் தெலுங்கில் ஒகே ஒக்க ஜீவிதம் (Oke Oka Jeevitham) என்ற பெயரில் வெளியானது. இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் ஷர்வானந்த் நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் அமலா அக்கினேனி, ரிது வர்மா, சதீஷ் ,ரமேஷ் திலக், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ரவி ராகவேந்திரா, யோக் ஜபே, வையாபுரி, ஜெய் ஆதித்யா, ஹிதேஷ், நித்யராஜ், மதன் குமார், டிஎஸ்ஆர் சீனிவாசன், கேபிஒய் பாலா, அபிஷேக் குமார், அர்ஜுனன், பத்மா முரளி, ஜஸ்லீன் கவுர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
இவர்கள் அனைவரும் தமிழ் மொழியில் உருவான படத்தில் நடித்து இருந்தனர். தெலுங்கு மொழியில் இவர்களின் பாதி நபர்களின் கதாப்பாத்திரத்திற்கு தெலுங்கு நடிகர்கள் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் வெளியாகி இருந்தாலும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




கணம் படத்தின் கதை என்ன?
சிறு வயதிலேயே நடிகர் ஷர்வானந்த் அவரது அம்மாவை இழந்துவிடுகிறார். இதன் காரணமாக சைக்கலாஜிகள் பிரச்னையில் உள்ள ஷர்வானந்திற்கு டைம் ட்ராவல் மிஷன் ஒன்று கிடைக்கின்றது. அதன் மூலம் தனது சிறுவயதின் காலத்திற்கு சென்று தனது அம்மாவைப் பார்க்கிறார். ஆனால் அந்த வாழ்க்கையை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத விதமாக அவர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். அதன்பிறகு என்ன நடந்தது அவரது அம்மாவின் விபத்தை தடுக்கிறாரா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திஐயரங்குகளில் வெளியாகி தற்போது மூன்று வருடங்களைக் கடந்துள்ளது. இதுகுறித்து படக்குழு தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Also Read… இயக்குநர் பாலாவிற்கு நன்றி சொல்ல வேண்டும் – ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்
கணம் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
From the past to the present, the journey of #Kanam continues to stay timeless. ❤️ Celebrating 3 beautiful years!#3YearsOfKanam@ImSharwanand @amalaakkineni1 @riturv @actorsathish @thilak_ramesh #JakesBejoy @sujithsarang @sreejithsarang @twittshrees @prabhu_sr #கணம் pic.twitter.com/uLnTBXZkxH
— DreamWarriorPictures (@DreamWarriorpic) September 9, 2025
Also Read… நான் இயக்கிய படங்களில் எனக்கு பிடித்த பெண் கதாப்பாத்திரம் இதுதான் – இயக்குநர் வெற்றிமாறன்