Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்திற்காக இத செய்தேன் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

Director AR Murugadoss: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் மதராஸி. படத்தின் வெளியீட்டிற்கு பிறகு பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருதாஸ் தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்திற்காகத்தான் தான் அதை செய்ததாக ஒரு விசயத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.

தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்திற்காக இத செய்தேன் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
ஏ.ஆர்.முருகதாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Sep 2025 19:26 PM IST

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss) இயக்கத்தில் கடந்த 5-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. தமிழ் சினிமாவில் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது இயக்கத்தில் இந்தப் படம் வெளியான நிலையில் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. முன்னதாக இவர் கடந்த 2020-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற படத்தை இயக்கினார். இந்தி சினிமாவில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவில் 5 ஆண்டுகளாக படங்களை வெளியிடாமல் இருந்து தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை வெளியிட்டது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ருக்மினி வசந்த் நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிஜு மேனன், வித்யுத் ஜம்வால், விக்ராந்த், ஷபீர் கல்லாரக்கல், ஆடுகளம் நரேன், சஞ்சய், தலைவாசல் விஜய், சந்தான பாரதி, வினோதினி வைத்தியநாதன்,  ரிஷி ரித்விக், ஜே. லிவிங்ஸ்டன், குருபரன் கார்த்திகேயன், சித்தார்த்த சங்கர், மோனிஷா விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது.

மதராஸி படத்திற்காக பழனி சென்று மொட்டையடித்த ஏ.ஆர்.முருகதாஸ்:

இந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு யூடியூப் சேனல் ஒன்றிற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியளித்தார். அதில் அவர் மொட்டையடித்து இருந்ததைப் பார்த்து அவரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மதராஸி படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு படத்தை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பழனி சென்று மொட்டை அடித்துக்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் முதன் முதலாக தீனா படம் திரையரங்குகளில் வெளியான போது பழனி சென்று மொட்டை அடித்துக்கொண்டதாகவும். அதனைத் தொடர்ந்து தற்போது மதராஸி படத்திற்காகதான் இதனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… ரீ ரிலீஸாகும் விஜய் – சூர்யாவின் ஃப்ரண்ட்ஸ் படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் பேசிய வீடியோ இதோ:

Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்தது ஷர்வானந்த் நடிப்பில் வெளியான கணம் படம்