Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kaantha : துல்கர் சல்மானின் காந்தா பட ரிலீஸ் ஒத்திவைப்பு.. காரணம் இதுதானா?

Kaantha Movie Postponed : தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் துல்கர் சல்மான். இவரின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியீட்டிற்கு கடத்திருந்த படம் காந்தா. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Kaantha : துல்கர் சல்மானின் காந்தா பட ரிலீஸ் ஒத்திவைப்பு.. காரணம் இதுதானா?
துல்கர் சல்மானின் காந்தாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Sep 2025 16:58 PM IST

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவர் நடிகராக மட்டுமில்லாமல், திரைப்பட தயாரிப்பாளராகவும் படங்களை உருவாக்கிவருகிறார். இந்நிலையில், இவரின் தயாரிப்பில் சமீபத்தில் லோகா திரைப்படமானது வெளியாகியிருந்தது. இதில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadharshan) நடித்திருந்தார். இந்த படமானது சுமார் ரூ 202 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது. இந்த படத்தை அடுத்ததாக துல்கர் சல்மானின் நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகியிருக்கும் படம்தான் காந்தா. இந்த படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கியிருக்கிறார். மேலும் இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்திருக்கிறார்.

இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 12ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்திருப்பதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து படக்குழு  அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : கூலி வரவேற்பு குறைவு.. ஆமிர்கான் – லோகேஷ் கனகராஜ் படம் கைவிடப்பட்டதா?

காந்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பதற்கு காரணம் :

நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பில், கடந்த 2025 ஆகஸ்ட் 28ம் தேதி முதல் வெளியான படம் லோகா. இந்த படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் இணைந்த நடித்திருந்தனர். மேலும் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் டோவினோ தாமஸ் இருவரும் கேமியோ வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் வரவேற்புகளை பெற்று வருகிறது. இந்நிலையில், காந்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பிற்கு இப்படமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : என் குடும்பமே 3 வேலை சாப்பிட நீங்கதான் காரணம் – நடிகர் விஷால்

காந்தா படக்குழு வெளியிட்ட அறிவிப்பின்படி, லோகா படமானது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இன்னும் சில நாட்களுக்கும் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என நினைக்கிறோம், அதனால் காந்தா படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாகவும், மேலும் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு பதிவை வெளியிட்டுள்ளது.

காந்தா படக்குழு வெளியிட்ட ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு பதிவு

காந்தா படத்தின் கதை :

இந்த காந்தா படத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சமுத்திரக்கனி இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படமானது முற்றிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகியுள்ளது. ஒரு இயக்குநருக்கும், நடிகருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை வைத்து இப்படமானது உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.