ஸ்போர்ட்ஸ் ட்ராமா படம் உங்களுக்கு பிடிக்குமா? அப்போ இந்த கூமர் படத்தை மிஸ் செய்யாதீர்கள்
Ghoomer Movie OTT: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் தான் நடிகர் அபிசேக் பச்சன். வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தனது திறமையான நடிப்பு காரணமாக தனக்கான ஒரு அடையாளத்தை சினிமாவில் உருவாக்கி வைத்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அபிஷேக் பச்சன். இவரது நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கூமர். இந்தப் படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் உடன் இணைந்து நடிகர்கள் சயாமி கெர், ஷபானா ஆஸ்மி, அங்கத் பேடி,
சிவேந்திர சிங் துங்கர்பூர், இவான்கா தாஸ், அக்ஷய் ஜோஷி, பியூஷ் ரெய்னா, பரி சர்மா, பாக்யா பானுஷாலி, பத்மநாப் பிந்த், கிரண் நவ்கிரே, பிஷன் சிங் பேடி, மோஹித் குமார், அமிதாப் பச்சன், நெரோலி புல்வெளிகள், சுபலட்சுமி சர்மா, கவிதா சிங், பக்தி டெலி, சயாலி சத்கரே, வேதிகா தவனே, பிரியா கௌசிக், நிதி தவாடா, சுஷ்மிதா அவாத், நீரலி ஓசா, பிரகாஷிகா நாயக், அக்ஷயா சர்வே, சைமா தாக்கூர், அப்பாஸ் மோமின், காஜல் சிசோடியா, குனீத் சந்து, அம்பர் போத்தா, நோன்குலுலேகோ தபேதே, பெர்னாடெட் கிரீஃப், கிறிஸ்டின் டாம்லின்சன், சமந்தா ஷூட்டே, லெபோகாங் நகாடிமெங், கைலா அபோட், நிக்கோல் ஸ்லியர், பாலினா மஷிஷி, ஜென்னா சியர்லே, கிறிஸ்டன் வான் விக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் ஆர் பல்கி எழுதி இயக்கி இருந்தார். மேலும் பல்கி உடன் இணைந்து இந்தப் படத்திற்கு ராகுல் சென்குப்தா மற்றும் ரிஷி விர்மானி இணைந்து திரைக்கதை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை ஹோப் பிலிம் மேக்கர்ஸ் மற்றும் சரஸ்வதி என்டர்டெயின்மென்ட் மற்றும் அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் இணைந்து ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, அபிஷேக் பச்சன், கௌரி ஷிண்டே, ரமேஷ் புலபக, அனில் நாயுடு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
கூமர் படத்தின் கதை என்ன?
சயாமி கெர் கிரிக்கெட் வீராங்கனையாக இருக்கிறார். இவருக்கு எதிர்பாராத விதமாக விபத்தில் ஒரு கை இழந்துவிடுகிறார். ஆனால் அவருக்கு அவரது ஆம்பிஷன் மீது இருக்கும் ஆசை காரணமாக தனது ஒரு கையுடன் விளையாட ஆசைப்படுகிறார். இந்த நிலையில் அவரது கோச்சாக வருகிறார் நடிகர் அபிஷேக் பச்சன். இவர் எப்படி ஒரு கை மட்டுமே உள்ள சயாமி கெர் தனது ஆம்பிஷனில் ஜெயித்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
நடிகர் அபிஷேக் பச்சனின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… வதந்திகளை நம்பாதீர்கள்… துல்கர் சல்மான் சொன்ன விசயம்!