Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மர்மமான பக்கத்து வீடு.. நகர விடாத த்ரில்லர் படம்.. ஹாட் ஸ்டாரில் ‘சூக்ஷமதர்ஷினி’ படம் மிஸ் பண்ணாதீங்க!

Sookshmadarshini Movie: மலையாள சினிமாவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை நஸ்ரியா நசீம் எண்ட்ரி கொடுத்தப் படம் சூக்ஷமதர்ஷினி. இந்தப் படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். மிஸ்ட்ரி காமெடி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் தற்போது ஹார்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

மர்மமான பக்கத்து வீடு.. நகர விடாத த்ரில்லர் படம்.. ஹாட் ஸ்டாரில் ‘சூக்ஷமதர்ஷினி’ படம் மிஸ் பண்ணாதீங்க!
சூக்ஷமதர்ஷினிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 21 Sep 2025 20:57 PM IST

மலையாள சினிமாவில் காமெடி மிஸ்ட்ரி த்ரில்லர் படமாக கடந்த நவம்பர் மாதம் 22-ம் தேதி 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சூக்ஷமதர்ஷினி. இந்தப் படத்தில் நடிகை நஸ்ரியா நசீம் நீண்ட நாட்களுக்குப் பிறகு எண்ட்ரி கொடுத்தது ரசிகரக்ளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் யாரும் எதிர்பாராத ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அகில பார்கவன், பூஜா மோகன்ராஜ், மெரின் பிலிப், சித்தார்த் பரதன், தீபக் பரம்போ, கோட்டயம் ரமேஷ், மனோஹரி ஜாய், அபிராம் ராதாகிருஷ்ணன், ஹெஸ்ஸா மெஹக், ஜனனி ராம், சரஸ்வதி மேனன், கோபன் மாங்காட்டு, ஜெய குருப், ரினி உதயகுமார், ஜேம்ஸ், நௌஷாத் அலி, ஏவி அனூப், அதிரா ராஜீவ், சஜீவன், சஜீத், பின்னி ரிங்கி, நந்தன் உன்னி, ஜோசி சிஜோ, Fr. சாஜி, அஜ்மல் ஷா, தியான் திவா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் எம்.சி.ஜித்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு திரைக்கதையை அதுல் ராமச்சந்திரன் மற்றும் லிபின் டி. பி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். மேலும் இந்தப் படத்தை ஏ.வி.ஏ புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹேப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.வி.அனூப், ஷைஜு காலித், சமீர் தாஹிர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

சூக்ஷமதர்ஷினி படத்தின் கதை என்ன?

நடிகை நஸ்ரியா நசீம் குடியிருக்கும் பகுதியில் இருப்பவர்கள் அனைவரும் உறவினர்கள் போல மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். அந்த ஏரியாவிற்கு உடல் நலம் குன்றிய தனது அம்மா உடன் குடி வருகிறார் நடிகர் பேசில் ஜோசஃப். நஸ்ரியா வீட்டில் இருந்து பார்த்தால் பேசிலின் வீடு நன்றாக தெரியும். இந்த நிலையில் தொடர்ந்து அந்த ஏரியாவில் உள்ளவர்களிடம் பேசில் ஜோசஃப் நன்றாகப் பழகி வருகிறார்.

ஆனால் பேசிலின் குடும்பத்தினர் மீது நஸ்ரியாவிற்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதனை அவரது ஏரியா நண்பர்களுடன் இணைந்து மர்மத்தை கண்டுபிடிக்க முடிவு செய்கிறார் நடிகை நஸ்ரியா. இவர்களின் இன்வஸ்டிகேஷனில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியின் ஃபனலிஸ்ட் இவர்கள் தான் – வெற்றி பெறப்போவது யார்?

நடிகை நஸ்ரியா நசீமின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

Also Read… வதந்திகளை நம்பாதீர்கள்… துல்கர் சல்மான் சொன்ன விசயம்!