Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியின் ஃபனலிஸ்ட் இவர்கள் தான் – வெற்றி பெறப்போவது யார்?

Cooku with Comali season 6: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டும் இன்றி பல ரியால்டி ஷோக்களுக்கு மக்களிடையே தொடர்ந்து வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில் சமையலை மையமாக வைத்து தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி.

குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியின் ஃபனலிஸ்ட் இவர்கள் தான் – வெற்றி பெறப்போவது யார்?
குக் வித் கோமாளி 6Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Sep 2025 15:34 PM IST

சின்னத்திரையில் தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. காலையில் 10 மணிக்கு தொடங்கும் சீரியல் தொடர்ந்து இரவு 11 மணி வரை ஒளிபரப்பாகி வருகின்றது. தமிழக மக்களின் பெரிய பொழுதுபோக்காக சின்னத்திரை இருந்து வருகின்றது. வாரம் முழுவதும் சீரியல் பார்க்கும் மக்களுக்கு ஒரு மாற்றமாக பல நிகழ்ச்சிகளை வார இறுதியில் ஒளிபரப்பி வருகின்றன பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள். அதன்படி பொழுதுபோக்கு ரியால்டி நிகழ்ச்சிகளை வழங்கும் சேனல்களில் ஒன்றாக இருப்பது விஜய் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் வாரம் முழுவதும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் வார இறுதியில் பல ரியால்டி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வருகின்றது. அதில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சியாக இருப்பது குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சி தற்போது 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. மேலும் சமயல் நிகழ்ச்சியை காமெடியை மையமாக வைத்து ஒளிப்பாரன முதல் நிகழ்ச்சி என்று ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றதாக இது உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பங்கேற்று சமையல் செய்வார்கள். இவர்களுக்கு உதவியாக சமையலே தெரியாத நபர்களை சேர்த்து இணைந்து சமைக்க வைப்பதே இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். கொரோனா காலத்தில் இந்த நிகழ்ச்சி பலருக்கு ஆருதலாக இருந்தது என்று பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியின் ஃபனலிஸ்ட் இவர்கள் தான்:

தொடர்ந்து 5 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் தற்போது 6-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 10 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில் தற்போது இறுதி நிகழ்ச்சியில் யார் யார் போட்டியிட உள்ளனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் முதல் ஃபைனலிஸ்டாக கடந்த வாரம் சபானா தேர்வானார்.

அதனைத் தொடர்ந்து நேற்றைய எபிசோடில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6-வது சீசனில் இரண்டாவது ஃபைனலிஸ்டாக ராஜூ ஜெயமோகனும், மூன்றாவது ஃபைனலிஸ்டாக லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனும் தேர்வாகினர். இந்த நிலையில் இன்றை எபிசோடு வைல்காட்ர் போட்டியாளர்களும் மீதம் உள்ள போட்டியாளர்கள் பங்கேற்கினறனர். அதில் அமரன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான உமைர் லத்தீஃப் 4-வது ஃபைனலிஸ்டாக தேர்வாகியுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Also Read… ராஜமௌலி இயக்கத்தில் கூட நடிச்சுட்டேன்… ஆனா தனுஷ் கூட வேலை செய்வது கடினம் – சத்யராஜ்

விஜய் தொலைக்காட்சி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… காலா பட நடிகைக்கு திருமணமா? இணையத்தில் வைரலாகும் தகவல்