ஓவியாவிற்கு பிறகு ரசிகர்களிடையே அதிகம் பிரபலமான பிக்பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா?
Bigg Boss Tamil : தமிழ் சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே இந்தப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்களை அவர்கள் ஆதரிக்க தவறியத்தில்லை. அந்த வகையில் முதலாவது சீசனில் மிகவும் வரவேற்பைப் பெற்றவர் நடிகை ஓவியா.

தமிழ் சினிமாவில் பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வருகின்றது. அதன்படி 2017-ம் ஆண்டு முதன் முதலாக ஒளிபரப்பானது பிக்பாஸ் தமிழ் சீசன் ஒன்று நிகழ்ச்சி. பிக் பாஸ் என்றால் பெரியதாக அறிமுகம் இல்லாத தமிழ் ரசிகர்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ் வெற்றிப் பெற்று இருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தப் போட்டியாளர் என்றால் அது நடிகை ஓவியாதான். நடிகையாக தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆன நடிகை ஓவியாவின் எதார்த்தமான பேச்சு நேர்மையான நடவடிக்கை ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்றப் போட்டியாளர்கள் தொடர்ந்து ஓவியாவை டார்கெட் செய்துவந்த நிலையில் மக்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவைத் தெரிவித்து வந்தனர்.
மேலும் பிக் பாஸ் வரலாற்றில் ஒரு போட்டியாளருக்கு ஆர்மியை மக்கள் தொடங்கினார்கள் என்றால் அது ஓவியாவிற்குதான். அப்படி ஓவியா ஆர்மி என்று ரசிகர்கள் தொடர்ந்து தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு அவரை பாராட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றியாளராக மாறவில்லை என்றாலும் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார் நடிகை ஓவியா. முதல் சீசனில் ஓவியாவிற்கு கிடைத்த ஆதவரை போல மாபெரும் ஆதவரைப் பெற்ற மற்றொரு போட்டியாளர் பிரதீப் ஆண்டனி. இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியில் போட்டியாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.




மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதீப் ஆண்டனி:
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பிரதீப் ஆண்டனி. இவர் அருவி படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு காரணம் போட்டியாளர்களிடையே வெளிப்படையாக பேசி வந்ததுதான்.
இவர் இப்படி பேசியது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் போட்டியில் இருந்த மற்ற போட்டியாளர்களுக்கு பிரதீப்பை பிடிக்கவில்லை. இதன் கரணமாக அவர் மீது தவறான குற்றச்சாட்டை வைத்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 7-வது சீசன் போட்டியாளர்களை ரசிகர்கள் மிகவும் விமர்சித்தனர். போட்டியாளர்களை மட்டும் இன்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாசனையும் பிரதீப் ஆண்டனிக்காக ரசிகர்கள் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் கவனம் பெறும் பிரதீப் ஆண்டனியின் வீடியோ:
View this post on Instagram
Also Read… டாக்டர் முதல் மதராஸி வரை… சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 வசூலித்த படங்களின் லிஸ்ட் இதோ!