Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

HBD Mysskin: கருப்பு கண்ணாடி… கலகல பேச்சு… மல்டி டேலண்ட் கொண்ட மிஷ்கினுக்கு ஹேப்பி பர்த்டே!

Director Mysskin: கோலிவுட் சினிமாவில் கருப்பு கண்ணாடி போட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அந்த கண்ணாடிய கலட்டுனாலே செய்தியாகும் ஒரே நபர் மிஷ்கின் தான். ரசிகர்களுக்கு பிடித்தமான இயக்குநராக இருக்கும் இவர் இன்று தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

HBD Mysskin: கருப்பு கண்ணாடி… கலகல பேச்சு… மல்டி டேலண்ட் கொண்ட மிஷ்கினுக்கு ஹேப்பி பர்த்டே!
மிஷ்கின்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 20 Sep 2025 14:40 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் மிஷ்கின் (Director Mysskin). இவர் கடந்த 2002-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து பலப் படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மிஷ்கின் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். ஆக்‌ஷன் ரொமாண்டிக் ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தில் நடிகர் நரேன் நாயகனாக நடிக்க நடிகை பாவனா நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் இயக்கிய படம் அஞ்சாதே. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்திலும் நடிகர் நரேன் தான் நாயகனாக நடித்து இருந்தார்.

இந்தப் படத்தில் பிரசன்னா வில்லனாக நடித்து இருந்தார். தொடர்ந்து இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் மற்றும் சைகோ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இறுதியாக இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைகோ படம் ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிசாசு 2 மற்றும் ட்ரெய்ன் ஆகும். இந்தப் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் படங்களில் மிஸ்ஸாகாத மஞ்சள் புடவை டான்ஸ்:

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் முதலாவதாக வெளியான சித்திரம் பேசுதடி படத்தில் வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலில் மஞ்சள் நிற புடவையை கட்டி நடனம் ஆடுவர். அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களிலும் மஞ்சள் புடவை நடனம் ஒன்று நிச்சயமாக இருக்கும். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டும் இன்றி பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கிறார். இவர் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் போட்டி ஒன்றில் நடுவராக இருக்கிறார். இவரது காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இன்று 20-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… இந்தியாவிலே சிறந்த சினிமாத்துறை என்றால் அதுதான்- ஆண்ட்ரியா ஜெரேமியா ஓபன் டாக்!

மிஷினின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் ஜெய் நடிக்காமல் தவறவிட்ட 3 சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா? அவரே சொன்ன விசயம்