Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் மரணம் – ரசிகர்கள் சோகம்

Robo Shankar : பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில் நடைபெற்றிருந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மீட்ட படக்குழுவினர் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் மரணம் – ரசிகர்கள் சோகம்
ரோபோ சங்கர்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Sep 2025 22:11 PM IST

பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவால் காலமானார். தனுஷின் மாரி படத்தின் மூலம் பிரபலமான அவர், அஜித்துடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் அதில் இருந்து மீண்டு வந்தார். இந்த நிலையில் செப்டம்பர் 17, 2025 அன்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரது மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் மரணம்

கடந்த செப்டம்பர் 17, 2025 அன்று படப்பிடிப்பில் இருந்த ரோபோ ஷங்கர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் படக்குழுவினர் அனுமதித்திருக்கின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 18, 2025 அன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 46. முன்னதாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதில் இருந்து குணமடைந்து மீண்டும் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : குட் பேட் அக்லி படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் – படக்குழு தொடர்ந்த வழக்கு

திருப்புமுனையாக மாரி திரைப்படம்

ஆரம்பத்தில் ஏய், தீபவாளி உள்ளிட்ட படங்களில் பெயர் குறிப்பிடாத வேடங்களில் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் ரோபோ சங்கர். இந்த நிலையில் அவருக்கு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி திருப்புமுனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் தனது தனித்துவமான உடல் மொழியால் ரசிகர்களைக் கவர்ந்தார். இதனையடுத்து திரையுலக கவனம் அவர் மீது திரும்பியது. அந்த வகையில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் தனது காமெடி நடிப்பால் தனது ரசிகர்களை கவர்ந்தார்.

குறிப்பாக தனுஷின் மாரி படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் கவனம் ஈர்த்தது. படம் முழுக்க தனது காமெடி டைமிங்கில் அதகளம் புரிந்திருப்பார். தொடர்ந்து அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும் என வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவரது டைலாக்கை கேட்டு ரசிகர்கள் வெடித்து சிரித்தனர். தொடர்ந்து அஜித்துடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

இதையும் படிக்க : என்னவளே அடி என்னவளே… 31 ஆண்டுகளை நிறைவு செய்த காதலன் படம்

சன் டிவியின் டாப்பு குக்கு டூப்பு குக்கு

சன் டிவியில் ஒளிபரப்பான டாப்பு குக்கூ டூப்பு குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். இந்த நிலையில் அவரின் வருகையால் நிகழ்ச்சியின் கலகலப்புக்கு காரணமாக இருந்தார். அந்த நிகழ்ச்சி முழுமையாக முடிவதற்குள் அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.