குட் பேட் அக்லி படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் – படக்குழு தொடர்ந்த வழக்கு
Good Bad Ugly: நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் காரணமாக நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் அந்தப் படத்தை ஓடிடியில் இருந்து நீக்கியது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குட் பேட் அக்லி படம். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் புதிதாக பாடல்கள் இசையமைக்கப்பட்டு இருந்தாலும் படத்தில் பழையப் பாடல்களும் இசையமைக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடகள் 3 குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
இந்தப் பாடல்கள் படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தனது அனுமதியின்றி படத்தில் பாடல்களைப் பயன்படுத்தியதாக படக்குழு மீது இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்தது. இதன் பிறகு படம் நெட்ஃபிலிக்ஸில் இருக்கும் படத்தில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக படக்குழு மீண்டும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தொடர்ந்து நெட்ஃபிலிக்ஸில் இருந்து படத்தை நீக்கினர்.




குட் பேட் அக்லி படக்குழு தொடர்ந்த வழக்கு – இளையராகா பதிலளிக்க உத்தரவு:
குட் பேட் அக்லி படத்தை ஓடிடியில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் ஓடிடியில் இருந்து படத்தை நீக்கியதால் எங்கள் நிறுவனடததிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்ட பின்பு பாடல்களை பயன்படுத்ட எப்படி தடைவிதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் படத்தில் மாற்றங்கள் செய்தால் மீண்டு தணிக்கை சான்றிதழ் அனுமதி பெறவேண்டியுக்கும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணையில் இசையமைப்பாளர் இளையராஜா வருகின்ற 24-ம் தேதி செப்டம்பர் மாதம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read… நடிகர் ஜெய் நடிக்காமல் தவறவிட்ட 3 சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா? அவரே சொன்ன விசயம்
குட் பேட் அக்லி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
AK sir’s MAGIC💥💥💥💥💥💥💥💥💥💥💥Love you my sir, Forever grateful sir❤️❤️❤️❤️🙏🏻🙏🏻 @MythriOfficial @SureshChandraa sir #GoodBadUglyBlockbuster ❤️💥🔥💥❤️🙏🏻 pic.twitter.com/wGM5AClBVt
— Adhik Ravichandran (@Adhikravi) April 18, 2025