நெட்ஃபிலிக்ஸில் இருந்து திடீரென நீக்கப்பட்ட அஜித்தின் குட் பேட் அக்லி படம் – என்ன காரணம் தெரியுமா?
Good Bad Ugly: நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி. இந்தப் படம் திரையரங்குகளின் வெளியீட்டிற்கு பிறகு தற்போது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒன்று இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் வெளியானது. இதில் விடாமுயற்சி படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. ஆனால் குட் பேட் அக்லி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் அஜித் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இயகுநர் ஆதிக் ரவிச்சந்திரனும் நடிகர் அஜித் குமாரின் ரசிகர் என்பதால் அவர் அஜித் குமாரின் முந்தையப் படங்களின் ரெஃபரன்ஸ்கள் பல வைத்து அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
இந்தப் படத்தில் நடிகர் அஜித் உடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், பிரசன்னா, பிரபு, ரெடின் கிங்ஸ்லி, சைன் டாம் சக்கோ என பலர் நடித்து இருந்த நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தா. படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் புதிதாக பாடல்கள் இசையமைத்து இருந்தாலும் முன்னதாக வெளியான படங்களில் இருந்து சிலப் பாடல்களும் பயன்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.




இளையராஜாவால் அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு வந்த சிக்கல்:
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் வெளியனா மூன்று பாடல்கள் அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டதாக கூறி இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் உள்ள குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை நீக்காமல் இருப்பதாக படக்குழு மீண்டும் வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது குட் பேட் அக்லி படத்தை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… குழிதோண்டி புதைக்கிற மாதிரியான விசயத்தை பண்ணாதீங்க – பாடகர் சத்யன் மகாலிங்கம்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Due to #Ilaiyaraaja copyright issues over using his songs, #Netflix takes down AK’s #GoodBadUgly! pic.twitter.com/2N6WOan8CZ
— Sreedhar Pillai (@sri50) September 17, 2025