Priyanka Mohan: அந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும்.. தனது ஆசையை தெரிவித்த பிரியங்கா மோகன்!
Priyanka Mohan About Jailer 2: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ப்ரியங்கா மோகன். இவரின் முன்னணி நடிப்பில் தெலுங்கில் ஓஜி என்ற படமானது தயாராகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், ஜெயிலர் 2 படம் குறித்து கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைளில் ஒருவராக இருந்து வருபவர் பிரியங்கா மோகன் (Priyanka Mohan). இவர் தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கென்று ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. அந்த வகையில், இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் பிரதர் (Brother). நடிகர் ரவி மோகனின் (Ravi Mohan) நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான பிரதர் படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்தாக தனுஷ் இயக்கிய(Dhanush) “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற படத்திலும் ஒரு பாடல் ஒன்றில் நடனமாடியிருந்தார். இந்நிலையில், தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். தற்போது இவரின் நடிப்பில் தெலுங்கில் உருவாகியிருக்கும் பிரம்மாண்ட திரைப்படம்தான் ஓஜி (OG).
நடிகர் பவன் கல்யாண் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரியங்கா மோகன், ஜெயிலர் 2 படத்தில் ஒருபகுதியாக இருக்கவேண்டும் என நினைத்ததாக கூறியிருக்கிறார். அவர் பேசியது பற்றி தெளிவாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : கோபம்.. கொந்தளிப்பு.. அனல் பறக்கும் மலையாள பிக்பாஸ்.. மோகன்லாலை பின்தொடர்வாரா விஜய்சேதுபதி?
ஜெயிலர் 2 படம் குறித்து நடிகை பிரியங்கா மோகன் பேச்சு :
ஓஜி படத்தில் ப்ரோமோஷன் தொடர்பாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பிரியங்கா மோகன். அதில், “நானும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 படத்தில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் நான் அந்த படத்தில் இல்லை” என்று நடிகை பிரியங்கா மோகன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : மகன் லிங்கா உடன் டான்ஸ் ஆடிய தனுஷ் – வைரலாகும் வீடியோ!
நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
பிரியங்கா மோகனின் புதிய தமிழ் படம் :
நடிகை பிரியங்கா மோகன் தமிழில் பிரதர் படம் வெளியாகி 1 வருடங்களுக்கும் மேலான நிலையில், தற்போது புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். கனா காணும் காலங்கள் என்ற தொடர் இயக்குநர் கென் ராய் இயக்கத்தில், கவின் நடிக்கும் புதிய படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவிருக்கிறார். நடிகர் கவினுடன் இந்த படத்தில் முதன் முறையாக ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், தற்போது சென்னையில் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.