Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தயாரிப்பாளர்களாக லோகா படத்தால் பணத்தை இழப்போம் என்று நினைத்தோம் – துல்கர் சல்மான் சொன்ன விசயம்

Dulquer Salmaan: நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளியான படம் லோகா சாப்டர் 1 சந்திரா. இந்தப் படத்தை தயாரித்த போது மலையள சினிமாவில் பெரிய பட்ஜெட் படம் என்று இதனை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்ததால் படத்தால் பணத்தை இழப்போம் என்று நினைத்தோம் என்று தெரிவித்துள்ளா.

தயாரிப்பாளர்களாக லோகா படத்தால் பணத்தை இழப்போம் என்று நினைத்தோம் – துல்கர் சல்மான் சொன்ன விசயம்
துல்கர் சல்மான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Sep 2025 08:30 AM IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan). இவர் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனாக சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தனது திறமையின் காரணமாக தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை தற்போது உருவாக்கியுள்ளார். மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தொடர்ந்து நடித்து பான் இந்திய அளவில் ஹிட் நடிகராக இருக்கிறார். இவர் நடிகராக மட்டும் இன்றி மலையாள சினிமாவில் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அதன்படி நடிகர் துல்கர் சல்மன் வேஃபரர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். தொடர்ந்து மலையாள சினிமாவில் துல்கர் சல்மன் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இவர் தயாரிக்கும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் நிறுவனம் தயாரித்துள்ள லோகா சாப்டர் 1 சந்திரன் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 200 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் துல்கர் சல்மான் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லோகா படத்தால் பணத்தை இழப்போம் என்று நினைத்தேன்:

அதன்படி அவர் அளித்தப் பேட்டியில் பேசியதாவது மலையாள சினிமாவில் ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த லோகா படம் மிகப்பெரிய பட்ஜெட் படம் ஆகும். தயாரிப்பாளராக, லோகாவில் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று நினைத்தோம். இது நல்ல படம் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் பட்ஜெட் அதிகம், வாங்குபவர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை. இந்த உரிமை நிறுவப்பட்டால், எங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த வெற்றி நினைத்துப் பார்க்க முடியாததாக உள்ளது என்று துல்கர் சல்மான் தெரிவித்து இருந்தார்.

Also Read… கவர்ச்சி உடை.. அந்த இயக்குநரின் படம்.. பல ஆண்டுகள் கழித்து பகீர் கிளப்பிய நடிகை மோகினி!

இணையத்தில் கவனம் பெறும் துல்கர் சல்மானின் பேச்சு:

Also Read… டான்ஸ் கோரியோவில் அந்த விசயம் மிகவும் பிரஷரா இருக்கு – சாண்டி மாஸ்டர்!