Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வைரல் போட்டோ குறித்து கலகலப்பாக பேசிய நடிகர் தனுஷ் – வைரலாகும் வீடியோ

Idli Kadai Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் இட்லி கடை. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்ற நிலையில் தனுஷின் வைரல் போட்டோ குறித்து அவர் அளித்த விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைரல் போட்டோ குறித்து கலகலப்பாக பேசிய நடிகர் தனுஷ் – வைரலாகும் வீடியோ
நடிகர் தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Sep 2025 15:42 PM IST

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இட்லி கடை. இந்தப் படத்தி நடிகர் தனுஷே எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படம் நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கடந்த வாரம் முழுவதும் இட்லி கடை படத்தில் நடித்துள்ள நடிகர்களின் புகைப்படங்களுன் அவர்களின் கதாப்பாத்திரத்தின் பெர்யர்களும் தொடர்ந்து வெளியிட்டனர். இந்தப் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நேற்று 14-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைப்பெற்றது.

இந்த விழாவில் இட்லி கடை படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் நாயகன் தனுஷ் உட்பட படக்குழுவினர் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் இசை வெளியீட்டு விழாவில் பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் பேசியபோது குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எடுத்தப் புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்படி என்னதான் யோசிச்சுட்டு இருந்தீங்க அப்போ?

இந்த நிலையில் நடிகர் தனுஷ் நேற்று பேசியபோது அந்த புகைப்படத்தைப் போட்டு அப்படி என்னதான் யோசிச்சுட்டு இருந்தீங்கனு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ் சிரித்துக்கொண்டே நடிகர்களுக்கு இது புரியும். அப்போ ராயன் படத்தின் பாடல்  பாடிட்டு இருந்தாங்க.

எனக்கு அந்த ராயன் படத்தின் கதாப்பாத்திரத்திற்குள் சென்றுவிட்டேன். அதனால்தான் அப்படி இருந்தேன். ஆனா அது இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று நடிகர் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார். இது ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை – இளையராஜா

இணையத்தில் வைரலாகும் தனுஷி வீடியோ:

Also Read… ராயன் படத்தை பார்த்தபோதே தனுஷ் கூட வேலை செய்யனும்னு நினச்சேன் – அருண் விஜய்