STR49: சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் STR49.. – இசையமைப்பாளர் யார் தெரியுமா?
STR49 Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த வகையில் , வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் இணைந்திருக்கும் படம்தான் STR49. இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சிலம்பரசன் (Silambarasan). இவருக்கு படங்கள் வெற்றியோ தோல்வியோ, இவரின் ரசிகர்கள் பட்டாளம் மட்டும் எப்போதும் குறைந்ததில்லை. அந்த அளவிற்கு இவரின் நடிப்பிற்கு ரசிகர்கள் ஏராளம். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் தக் லைஃப் (Thug Life). கமல்ஹாசன் (Kamal Haasan) முன்னணி கதாநாயகனாக இப்படத்தில் நடித்திருந்த நிலையில், அவருக்கு இணையான வேடத்தில் சிலம்பரசன் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக, சிலம்பரசன் தற்போது வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படமானது STR49 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமானது வட சென்னை (Vada Chennai) திரைப்படத்தின் ஓரே டைம் லைனில் உருவாகவுள்ளதாம்.
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், கடந்த 2025 செப்டம்பர் 4 ஆம் தேதியில், வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. மேலும் இப்படத்தின் இசையமைக்குப்பாளர் யார் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், அது வேறு யாருமில்லை ஜி.வி. பிரகாஷ் குமார்தான் (GV. Prakash KUumar) என்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க : ஐஸ்வர்யா லெக்ஷ்மி எடுத்த திடீர் முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்!
STR49 திரைப்படத்தின் அறிவிப்பு :
வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள். ▶️https://t.co/6QoXAEq9PL@SilambarasanTR_ #VetriMaaran #KalaippuliSThanu #RVelraj #STR49 #VCreations47 pic.twitter.com/ys4zbVBwux
— Kalaippuli S Thanu (@theVcreations) September 4, 2025
STR49 படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் :
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார், STR49 படத்தின் அறிவிப்பிற்கு முன் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அந்த நேர்காணல் பேசிய அவர், சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் படம் நடந்தால் அதில் நான் நிச்சயமாக இசையமைப்பேன். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்ததும் தெரியவரும் என அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : டைரக்டர் வெற்றிமாறன் டூ டாக்டர் வெற்றிமாறன் – பட்டம் வழங்கி கௌரவித்த ஐசரி கணேஷ்
ஒருவேளை அது உண்மையானால், சுமார் 17 வருடங்களுக்கு பின் சிலம்பரசனின் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக சிம்புவின் காளை என்ற படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் STR49 படத்தின் நடிகை யார்?
சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் உருவாகும் படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவும் ,விரைவில் வெளியாகவுள்ளதாம். மேலும் இந்த STR49 படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.