Samantha: தாய்மை என்பது வரம்.. அந்த அழகான அனுபவத்திற்காக காத்திருக்கிறேன் – சமந்தா!
Samantha About Motherhood Dreams : நடிகை சமந்தா ரூத் பிரபு, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையிலும், இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் மட்டும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில் சமந்தா, தாய்மை பற்றி கூறிய கருத்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவர் கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை. இவரின் கடைசியாக வெளியான படம் குஷி (Kushi). கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படத்தில், விஜய் தேவரகொண்டாவுடன் (Vijay Deverakonda) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது இவர்களுக்கு ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த படத்தை அடுத்ததாக சில உடல்நல பிரச்சனையின் காரணமாக சமந்தா படங்களில் நடிப்பதை தவிர்த்திருந்தார். இந்நிலையில், மேலும் தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி தயாரிப்பாளாராக சினிமாவில் படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார்.
மேலும் இவர் இயக்குநர் ராஜ் நிடிமொரு (Raj Nidimoru) என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் சமந்தா கூறிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது . அவர் அதில், “தாய்மையை பற்றியும், அந்த வரம் எனக்கும் கிடைக்கும் “என்பது பற்றியும் பேசியுள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.




இதையும் படிங்க : சிம்புவை அப்படி சொல்லாதீங்க.. இதுதான் உண்மை – ஓபனாக பேசிய அஸ்வத் மாரிமுத்து!
தாய்மையை பற்றி நடிகை சமந்தா பேசிய விஷயம் :
நடிகை சமந்தா, எனது வயதை பற்றி என் நலம் விரும்பிகள் கவலைப்படுகிறார்கள் என்பது எனக்கு நான்றாக தெரிகிறது. ஆனால் அதற்காக நான் தாய்மையடைவதற்கு தாமதமாகிவிட போகிறது என்று எல்லாம் நினைக்கவேண்டாம். நானும் ஒரு தாயாக வேண்டும் என்ற கனவு என்னிடம் அப்படியேதான் இருக்கிறது. அந்த அழகான அனுபவத்தை எதிர்பார்த்து நான் ஆவலாக காத்திருக்கிறேன்.
இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜின் LCUவில் இணைந்த வாத்தி பட நடிகை.. வைரலாகும் போஸ்டர்!
ஒரு பெண் நினைத்தால் அவள் தயாகமுடியாத நேரம் என்று என்பதே வாழ்க்கையில் எதுவும் இல்லை. தாய்மை என்பது ஒரு வரமாகும், எந்த வரம் எனக்கும் கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என்று நடிகை சமந்தா தாய்மை பற்றிய தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
நடிகை சமந்தா ரூத் பிரபுவின் இன்ஸ்டாகிராம் லேட்டஸ்ட் போஸ்ட் :
View this post on Instagram
இரண்டாவது திருமணம் செய்கிறாரா சமந்தா?
நடிகை சமந்தாவும், பிரபல இயக்குநரான ராஜ் நிதிமொருவும் காதலித்து வருவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து சமந்தாவின் பக்கத்திலும் அல்லது ராஜ் நிதிமொருவின் பக்கத்திலும் சரி எந்தவித பதில்களும் மறுப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இவர்கள் இருவரும் உண்மையிலே திருமணம் செய்யவுள்ளார்களான என்று பேசப்பட்டு வருகிறது. மேலும் சமீபகாலமாக பல இடங்களில் இவர்கள் இருவரும் இணைந்து செல்லும் நிலையில், இந்த தகவல் உண்மைதான் என்றும் ரசிகர்கள் இணையத்தில் தகவல்களை பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.