Ashwath Marimuthu: சிம்புவை அப்படி சொல்லாதீங்க.. இதுதான் உண்மை – ஓபனாக பேசிய அஸ்வத் மாரிமுத்து!
Ashwath Marimuthu About Silambarasan : தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்து வருபவர் சிலம்பரசன். சமீபத்தில் இவரை பற்றிய நெகடிவ் விமர்சனங்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அதுகுறித்து விளக்கமாக பேசியுள்ளார். மேலும் STR51 படத்தின் தாமதத்தின் காரணம் பற்றியும் கூறியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் ஓ மை கடவுளே (Oh May kadavule) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu). இவரின் இயக்கத்தில் இறுதியாக டிராகன் (Dragon) திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்தாக, தொடர்ந்து சிலம்பரசனுடன் (Silambarasan) புதிய படத்திலும் இணையவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. இந்த படமானது STR51வது படமாக உருவாகவுள்ளதாக கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகளும் தற்போது சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரிடம், STR51 படத்தை பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்து பேசிய அஸ்வத் மாரிமுத்து, சிலம்பரசனை பற்றிய நெகடிவ் தகவல்கள் மற்றும் STR51 பட தாமதம் குறித்தும் விவரமாக பேசியுள்ளார். அவர் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : நல்ல நட்பை கொச்சைப்படுத்திடீங்க.. திருநங்கை கொடுத்த புகாருக்கு நாஞ்சில் விஜயன் பதில்!
சிலம்பரசன் பற்றி அஸ்வத் மாரிமுத்து பேசிய விஷயம் :
அந்த நிகழ்ச்சியில் அஸ்வத் மாரிமுத்து, “சிலம்பரசன் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை பற்றி மீண்டும் சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. அவர் சினிமாவில் எதற்கும் வரவில்லை, அவரிடம் ஜாக்கிரதையாக இருங்க என்று தவறான விஷயங்கள் பரவி வருகிறது. நான் பொதுவாக எல்லாரிடமும் கூறுகிறேன், சிம்புவை நான் நாளைக்கு ஷூட்டிங் கூப்பிட்டாலும் அவர் வருவதற்கு தயாராகி இருப்பார்.
இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜின் LCUவில் இணைந்த வாத்தி பட நடிகை.. வைரலாகும் போஸ்டர்!
ஏனென்றால் அவர் தனது முழு ஈடுபாட்டையும் சினிமாவிற்குத்தான் கொடுத்து வருகிறார். என்னுடைய STR51 படத்தில் தவறு என்மீதுதான், ஏனென்றால் நான் படத்தின் கதையை எழுதுவதற்கு அதிக டைம் தேவையாக இருக்கிறது.
சிலம்பரசன் பற்றி அஸ்வத் மாரிமுத்து பேசிய வீடியோ பதிவு :
#Ashwath Recent
– Recently, everyone has again been talking negatively about #STR sir.
– If the shoot begins tomorrow, he is ready to come. The mistake is mine because I take time to develop the story.#SilambarasanTR #STR51pic.twitter.com/kYMgNfkAg3— Movie Tamil (@_MovieTamil) September 12, 2025
மேலும் நானும் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறேன். டிராகன் படத்திற்காக கிட்டத்தட்ட 1 ஆண்டுகளுக்கும் மேல் உழைத்தேன். மேலும் தற்போது, எனது அம்மா அப்பாவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறேன். டிராகன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்த படத்தை அடுத்து பண்ணும் படத்திற்கு இன்னும் அதிகம் கவனம் தேவை என நான் நினைக்கிறேன்.
மேலும் சிலம்பரசனுடன் எனது படம் உருவாகும் நிலையில், அதற்கு அதிகம் கவனம் தேவை. நிச்சயமாக அடுத்த வருடத்தில் (2026) STR51 படம் ரிலீசாகும். நிச்சயமாக அந்த படத்தை அனைவரும் என்ஜாய் பண்ணுவீங்க என்று அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசியுள்ளார்.