Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aishwarya Lekshmi : ஐஸ்வர்யா லெக்ஷ்மி எடுத்த திடீர் முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்!

Aishwarya Lekshmi Quits Social Media: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இனி சமூக ஊடகங்ககளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Aishwarya Lekshmi : ஐஸ்வர்யா லெக்ஷ்மி எடுத்த திடீர் முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்!
ஐஸ்வர்யா லெக்ஷ்மிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Sep 2025 15:13 PM IST

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி (Aishwarya Lekshmi) , தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக மாமன் (Maaman) என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு (Soori) ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் இவரின்  நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது என்றே கூறலாம் . அந்த அளவிற்கு இந்த மாமன் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மேலும் புதிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தற்போது இவர் நடிகர் விஷ்ணு விஷாலின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2) திரைப்படத்தில் , கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இனி சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாகவும், தனது நடிப்பின் மீது முழு கவனம் செலுத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து விலகவுள்ளதாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி அறிவித்துள்ளார். இது அவரின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தமிழில் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சாய் பல்லவி – வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி வெளியிட்ட அறிவிப்பு பதிவு

அந்த பதிவில் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி , சமூக ஊடகங்களால் அவசியமில்லாத தகவல்கள் வருவதாகவும், மேலும் அவர் பழைய பாணியில் மீண்டும் சினிமாவில் தனது நடிப்பை தொடரவுள்ளதாகவும் கூறியுள்ளார். அதன் காரணமாக இந்த சமூக ஊடகங்களில் இருந்து தன்னை விலக்கி கொள்வதாக அவர் அந்த பதிவில் விரிவாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க : விடாமுயற்சி படம் வெற்றிப்படம்தான் – இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன விசயம்!

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி , தற்போது ஊடகங்களில் இருந்து விலகுவதாக கூறியுள்ள நிலையில், அது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரின் ரசிகர்கள் அந்த பதிவின் கீழ் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .

ஐஷ்வர்யா லெக்ஷ்மியின் புதிய திரைப்படங்கள்

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி மாமன் படத்தை அடுத்தாக, தற்போது நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் “கட்டா குஸ்தி 2” படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் தொடங்கியுள்ளது. மேலும், தெலுங்கில் “சம்பராலா எட்டி கட்டு” என்ற படத்திலும் மற்றும் மலையாளத்தில் “ஆஷா” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறாரா என்பது குறிப்பிடத்தக்கது.