Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எப்போதும் அந்த நடிகர்தான் எனக்கு உயிர்.. சித்தார்த் சொன்ன நடிகர் யார் தெரியுமா?

Siddharth : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சித்தார்த். இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில், இவர் நேர்காணல் ஒன்றில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்பது குறித்து பேசியுள்ளார். அது யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

எப்போதும் அந்த நடிகர்தான் எனக்கு உயிர்.. சித்தார்த் சொன்ன நடிகர் யார் தெரியுமா?
சித்தார்த் Image Source: social media
Barath Murugan
Barath Murugan | Published: 13 Sep 2025 06:30 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2002ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான “கண்ணத்தில் முத்தமிட்டாள்” என்ற படத்தில், சிறு வேடத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் சித்தார்த் (Siddharth) நுழைந்தார். பின் இயக்குநர் ஷங்கர் (Shankar) இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற படத்தில், “முன்னா” என்ற வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக “ஆயுத எழுத்து” போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் முன்னணி கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் “நுவ்வோஸ்தானன்ட் நேனோத்தன்டனா”. இந்த படத்தை பிரபு தேவா (Prabhu Deva) இயக்கியிருந்தார். இந்த படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம்தான் உனக்கும் எனக்கும். பிரபுதேவாவின் இயக்கத்தில் தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, பின் இந்தி போன்ற மொழிகளிலும் நடிக்க தொடங்கினார்.

இவருக்கு தெலுங்கி தொடர்நது பல படம் சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இந்த படங்களை தொடர்ந்து , பல ஆண்டுகளுக்குப் பின் 2012ம் ஆண்டு வெளியான “காதலில் சொதப்புவது எப்படி” என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களமிறங்கினார். இப்படமானது அவருக்கு போதுமான வரவேற்பை கொடுக்கவில்லை.

இதையும் படிங்க : பிரமாண்ட இயக்குநர் சங்கருக்கு இப்போ இருக்கும் இயக்குநர்கள் யாரை பிடிக்கு? அவரே சொன்ன லிஸ்ட்

மேலும் தற்போதுவரையிலும் தமிழ் சினிமாவில் படங்களில் நடித்த வருகிறார் சித்தார்த். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், அதில் ஆரம்பகாலம் முதல் தற்போதுவரை பிடித்த ஒரே நடிகர் யார் என்பதை பற்றி கூறியுள்ளார். அந்த நடிகர் வேறு யாருமில்லை கமல்ஹாசன்தான் (Kamal Haasan).

கமல்ஹாசன் குறித்து பேசிய சித்தார்த் :

அந்த நேர்காணலில் நடிகர் சித்தார்த்திடம் உங்களுக்கு சினிமாவிலே பிடித்த நடிகர் யார் என்று கேள்விகேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சித்தார்த், “எனக்கு சினிமாவில் அன்று முதல் இன்றுவரை கமல்ஹாசன் சார்தான். இவருக்கு முன் சிவாஜி கணேசன் சார் மற்றும் எஸ்.பி. ரங்காராவ் போன்ற நடிகர்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என அந்த நேர்காணலில் நடிகர் சித்தார்த் பேசியிருந்தார். இது குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : நான் காதல் படங்களில் நடித்தால் அது இப்படி மட்டும் தான் இருக்கும் – நடிகர் அர்ஜுன் தாஸ் சொன்ன விசயம்!

நடிகர் சித்தார்த்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் :

 

View this post on Instagram

 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

நடிகர் சித்தார்த்தின் புதிய படங்கள் :

நடிகர் சித்தத்தின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு வெளியான திரைப்படம் 3BHK. இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இலாயக்கியிருந்தார். இதில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீத்தா ரகுநாத் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படமானது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. மேலும் தற்போது சித்தார்த், இந்தியன் 3 படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.