Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மகன் லிங்கா உடன் டான்ஸ் ஆடிய தனுஷ் – வைரலாகும் வீடியோ!

Dhanush dances with son Linga: நடிகர் தனுஷின் இளைய மகன் லிங்கா. இவர் அவ்வபோது சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தனது தந்தை தனுஷின் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டுக்கு வந்தபோது அவருடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகின்றது.

மகன் லிங்கா உடன் டான்ஸ் ஆடிய தனுஷ் – வைரலாகும் வீடியோ!
லிங்கா, தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Sep 2025 20:37 PM IST

கோலிவுட் சினிமாவில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனாக நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் தனுஷ் (Dhanush). இவர் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகந்தின் மூத்த மகளான இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்தார். இது பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு பிரமாண்டமாக நடைப்பெற்ற திருமணம் ஆகும். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு யாத்ரா என்ற மூத்த மகனும் லிங்கா என்ற இளைய மகனும் உள்ளனர். தொடர்ந்து திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்த இவர்கள் கடந்த 2024-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விவாகரத்தைப் பெற்றனர். இருவரும் மனப்பூர்வமாக பிரிவதாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்தனர். இந்த செய்தி ரசிகர்களை மட்டும் இன்றி அவர்களின் குடும்பத்தினரையும் அதிகமாக பாதித்தது. மேலும் தங்களது வருத்தத்தை ரசிகர்கள் வெளிப்படையாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து விவாகரத்து பெற்றாலும் தங்களின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவின் நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாக கலந்துகொள்ளும் பல வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருவது வழக்கம். இந்த நிலையில் தனுஷின் இளைய மகன் லிங்கா அவரது தந்தை அல்லது தாத்தா ரஜினிகாந்தின் பட விழாக்களில் கலந்துகொள்ளும் போது எல்லாம் அவர்கள் பேசுவதை வீடியோ எடுப்பார்.

தந்தை தனுஷுடன் டான்ஸ் ஆடிய லிங்கா:

இந்த நிலையில் நேற்று தனுஷின் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட போது லிங்காவிடம் நிகழ்ச்சி தொகுப்பளர்கள் அப்படி எவ்வளவுதான் போன் மெமரி வைத்து இருப்பீர்கள் என்று மீம்ஸ்களில் ரசிகர்கள் கேட்ட கேள்வியை எழுப்புகிறார்கள். இதனை சிரித்துக்கொண்டே பார்க்கும் லிங்காவிடம் லிங்கா என்ன வீடியோ எடுக்கவில்லையா என்று தனுஷ் கேட்கிறார் அதுவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் இருவரும் இணைந்து இட்லி கடை படத்தில் இருந்து எஞ்சாமி என்ற பாடலைப் பாடுகின்றனர். அப்போது மேடையில் இருந்த தனுஷ் தனது இளைய மகன் லிங்காவை மேடைக்கு அழைத்து அவருடன் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கவர்ச்சி உடை.. அந்த இயக்குநரின் படம்.. பல ஆண்டுகள் கழித்து பகீர் கிளப்பிய நடிகை மோகினி!

இணையத்தில் வைரலாகும் தனுஷ் – லிங்கா டான்ஸ் வீடியோ:

Also Read… ராவோடு ராவா கோட்டையில உக்காந்துட்டு புதுபுது சட்டம் போடுவீங்க, தூங்கி எழுந்து பாத்தா நாங்க குற்றவாளியா? – தண்டகாரண்யம் படத்தின் ட்ரெய்லர் இதோ!