Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவா படத்தில அந்த கதாப்பாத்திரம் ரொம்ப பிடிச்சு செஞ்சேன் – நடிகர் சம்பத் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

Actor Sampath Raj: கோலிவுட் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் சம்பத் ராஜ். இவர் வில்லன், காமெடியன் என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிப்பார் என்று ரசிகர்கள் பாராட்டுவார். இந்த நிலையில் கோவா படம் குறித்து இவர் அளித்தப் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

கோவா படத்தில அந்த கதாப்பாத்திரம் ரொம்ப பிடிச்சு செஞ்சேன் – நடிகர் சம்பத் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
நடிகர் சம்பத்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Sep 2025 07:30 AM IST

இயக்குநர் வெங்கட் பிரபு (Director Venkat Prabhu) எழுதி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கோவா. இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெய், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், சம்பத் ராஜ், பியா பாஜ்பாய், சினேகா, மெளனி மேரி, சந்திரசேகர், விஜயகுமார், சண்முகசுந்தரம், ஆனந்தராஜ், ஸ்ரீலேகா ராஜேந்திரன், சத்தியப்ரியா, ரவிகாந்த், கோவை செந்தில், சங்கீதா கிருஷ்ணசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து சிறப்பு கதாப்பாத்திரத்தில் அஜய் ராஜ், சிலம்பரசன், நயன்தாரா, பிரசன்னா, வெங்கட் பிரபு, வாசுகி பாஸ்கர், சக்தி சரவணன், சில்வா, டி. சிவா, பவதாரிணி என பலர் இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து இருந்தனர்.

ரொமாண்டிக் காமெடிப் படமாக வெளியான இந்தப் படத்தை ஓச்சர் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தேனி மாவட்டத்தில் இருக்கும் பண்ணைபுரம் என்ற கிராமத்தில் வசிக்கும் மூன்று இளைஞர்கள் கோவில் நகைகளை திருடிக்கொண்டு கோவாவிற்கு செல்கிறார்கள். அதன்பிறகு என்ன நடந்தது அவர்கள் திரும்ப ஊருக்கு வந்தார்களா இல்லையா? அல்லது அவர்கள் நினைத்தது போல வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்தார்களா என்பதே படத்தின் கதை.

கேய் கதாப்பாத்திரம் எனக்கு ரொம்ப பிடிச்சு நடிச்சேன்:

இந்த நிலையில் இந்தப் படத்தில் கேய் (ஓரின சேர்க்கையாளர்) கதாப்பாத்திரதில் நடிகர் சம்பத் நடித்து இருந்தார். இவர் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியபோது கோவா படத்தின் ஒன்லைன் வெங்கட் பிரபுகிட்ட சொன்னேன். ஆனா அவர் அப்படியே அதை மாற்றி ஒரு புதிய கதையை என்னிடம் சொன்னா. நான் சொன்ன ஒன்லைனில் கேய் கதாபபத்திரம் இல்லை.

ஆனால் வெங்கட் பிரபு சொன்ன கதையில் கே கதாப்பாத்திரம் இருந்தது. இந்த கதையை அவர் என் வீட்டில் வச்சுதான் சொன்னார். நான் அந்த கேய் கதாப்பாத்திரம் யார் நடிக்கிறார் என்று கேட்டேன். அவர் கீழ போய் பேசலாம் என்று எனது அப்பார்ட்மெண்டின் கீழே வந்த உடன் அவர்கிட்ட திரும்ப கேட்டேன். அவர் உடனே நீதான் என்று சொல்லிட்டு ஓடிட்டார். ஆனா அவர நிக்க சொன்னா ஓடிட்டாரு நான் திட்டுவேன்னு நினைச்சு. ஆனா எனக்கு அது ரொம்ப பிடிச்சு இருந்தது என்று அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

Also Read… டான்ஸ் கோரியோவில் அந்த விசயம் மிகவும் பிரஷரா இருக்கு – சாண்டி மாஸ்டர்!

நடிகர் சம்பத்தின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Sampath Raj (@sampathrajofficial)

Also Read… துணிவு படம் எனது சினிமா வாழ்க்கையே மாற்றியது – இயக்குநர் எச். வினோத்