Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

துணிவு படம் எனது சினிமா வாழ்க்கையே மாற்றியது – இயக்குநர் எச். வினோத்

Director H Vinoth: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் எச். வினோத். தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்துவரும் நிலையில் முன்னதாக இவர் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

துணிவு படம் எனது சினிமா வாழ்க்கையே மாற்றியது – இயக்குநர் எச். வினோத்
இயக்குநர் எச். வினோத்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Sep 2025 08:30 AM IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் எச் வினோத் (Director H Vinoth). இவர் சதுரங்க வேட்டை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இந்த நிலையில் இறுதியாக இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் துணிவு. கடந்த 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், அஜய் குமார், வீரா, ஜி.எம்.சுந்தர், பிரேம் குமார், தர்ஷன், மகாநதி சங்கர், பகவதி பெருமாள், மோகன சுந்தரம், பால சரவணன், சிராக் ஜானி, ரிதுராஜ் சிங், சிஜாய் வர்கீஸ், அமீர், பவானி ரெட்டி, சிபி புவனா, பிர்லா போஸ், வளவன், மமதி சாரி, ஏ.எல்.அழகப்பன், குமார் நடராஜன், ஜி.பி.முத்து, காளீஸ்வரன், பத்மா, நளினிகாந்த் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

துணிவு படத்திற்கு பிறகு வாழ்க்கையே மாறியது:

வங்கி கொள்ளையை மையமாக வைத்தும் வங்கியில் நடைபெறும் ஊழல்கள் குறித்தும் அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் இந்தப் படம் வெளிப்படையாக பேசி இருக்கும். மிகவும் ஸ்டைலிசான லுக்கில் இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து இருந்தது அவரது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்தப் படத்தை இயக்கியது குறித்து இயக்குநர் எச் வினோத் வெளிப்படையாக பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதில் அவர் பேசியதாவது துணிவு படம் பாஸ் ஆபிஸ் வசூலி நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் படம் ரசிகர்களிடையே ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. தமிழ்நாடு மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதந்தப் படம் என்னை சினிமாவில் அடுத்தகட்டத்திற்கு உயர்த்தியுள்ளது என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார் இயக்குநர் எச் வினோத்.

Also Read… 

இணையத்தில் கவனம் பெறும் எச் வினோத்தின் பேச்சு:

Also Read…