Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Sethupathi : ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுக்க இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா விஜய் சேதுபதி?

Bigg Boss Tamil Host Salary : தமிழில் மக்களிடையே பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் நடைபெற்று வருவது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து பார்க்கலாம்.

Vijay Sethupathi : ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுக்க இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா விஜய் சேதுபதி?
விஜய் சேதுபதிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 12 Sep 2025 17:03 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay sethupathi). இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இவர் சினிமாவை தாண்டியும் தமிழில் தொலைக்காட்சியில் பிக்பாஸ் (Bigg Boss) என்ற நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார். தமிழில் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தமாக பிக்பாஸ் 8 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், இந்த 2025ம் ஆண்டிற்கான 9வது சீசனின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த பிக்பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியையும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியானது வரும் 2025 அக்டோபர் மாதத்தின் இறுதியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக விஜய் சேதுபதி, எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு வெளியான பிக்பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியை தொகுப்பதற்கு, விஜய் சேதுபதி சுமார் ரூ 60 கோடிகளை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் சீசன் 9ல் சுமார் ரூ 65 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்குவார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இதையும் படிங்க : அர்ஜுன்தாஸின் நடிப்பில் வெளியான பாம்ப் படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!

பிக்பாஸ் சீசன் 9 தமிழ் குறித்து பிக்பாஸ் குழு வெளியிட்ட பதிவு

பிக்பாஸ் சீசன் 9ல் மாற்றம் :

இதுவரை தமிழில் பிக்பாஸ் 8 சீசன்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதிலும் குறிப்பாக கடந்த 2024ம் ஆண்டு வெளியாகிவந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், இதுவரை எந்த சீசன்களிலும் இல்லாதது போல, அதிக போட்டியாளர்கள் பங்குபெற்றிருந்தனர். இதில், இறுதியாக முத்துகுமாரன்தான் சீசன் 8ன் டைட்டில் வின்னர் ஆனார்.

இதையும் படிங்க : நல்ல நட்பை கொச்சைப்படுத்திடீங்க.. திருநங்கை கொடுத்த புகாருக்கு நாஞ்சில் விஜயன் பதில்!

இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சியியை அடுத்ததாக, பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியிலும் அதீத மாற்றங்களுடன் கொண்டுவரப்பட்டிருக்கிறதாம். இந்த சீசனின் சுமார் 22 போட்டியாளர்களுக்கு மேல் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற சீசன்களை ஒப்பிடும்போது இது மிக பிரம்மாண்டமாக அமையும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

சீசன் 1 முதல் சீசன் 8 வரை பிக்பாஸ் வெற்றியாளர்கள் :

கடந்த 2017ம் ஆண்டி வெளியான பிக்பாஸ் சீசன் 1ன் நிகழ்ச்சியில், வெற்றியாளராக ஆரவ் டைட்டிலை வென்றார். மேலும் சீசன் 2ல் நடிகை ரித்விகா வென்றார். சீசன் 3ல் முகேன் ராவ், சீசன் 4ல் ஆரி அர்ஜுனன், சீசன் 5ல் ராஜு, சீசன் 6ல் அசீம், சீசன் 7ல் அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் சீசன் 8ல் முத்துக்குமரன் என பிக்பாஸ் தமிழ் 8 சீசன்களிலும் 8 போட்டியாளர்கள் வெற்றிபெற்றிருந்தனர். மேலும் இந்த 2025ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி தொடங்கவுள்ள நிலையில், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.