Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bomb Movie: அர்ஜுன்தாஸின் நடிப்பில் வெளியான பாம்ப் படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!

Bomb Movie X Review :தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அர்ஜுன்தாஸ். இவரின் நடிப்பில் இன்று 2025 செப்டம்பர் 12ம் தேதியில் வெளியான படம் பாம். இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்து தெளிவாக பார்க்கலாம்.

Bomb Movie: அர்ஜுன்தாஸின் நடிப்பில் வெளியான பாம்ப் படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!
அர்ஜுன்தாஸின் பாம் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Sep 2025 14:04 PM IST

நடிகர் அர்ஜுன்தாஸ் (Arjun Das) கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியான குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித் குமாருக்கு (Ajith Kumar) எதிரான வில்லனாக நடித்திருந்த நிலையில், பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்திருந்தார். அவ்வாறு, இயக்குநர் விஷால் வெங்கட் (Vishal Venkat) இயக்கத்தில், அர்ஜுன்தாஸ் நடித்திருந்த படம்தான் பாம் (Bomb). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 2025 செப்டம்பர் 12ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன்தாஸ், காளி வெங்கட் (Kaali Venkat) மற்றும் சிவாத்மிக்கா ராஜசேகர் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் கதாபாத்திரத்திற்கு இணையான வேடத்தில், நடிகர் காளி வெங்கட்டும் நடித்திருக்கிறார். இப்படமானது. இதுவரையில் தமிழ் சினிமாவில் வெளியாகாத வித்தியாசமான கதையில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கான எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : சிம்புவை அப்படி சொல்லாதீங்க.. இதுதான் உண்மை – ஓபனாக பேசிய அஸ்வத் மாரிமுத்து!

அர்ஜுன்தாஸின் பாம் படத்தைக் குறித்த எக்ஸ் விமர்சனம் :

இந்த பாம் படமானது மாறுபட்ட கதையில் மிகவும் அருமையாக உள்ளதாம். அர்ஜுன்தாஸ் மற்றும் காளி வெங்கட் நடிப்பும் நன்றாக வந்திருபதாக கூறப்படுகிறது. 5க்கு 4 என்ற ரேட்டிங் கொடுக்கப்படுகிறது.

பாம் படத்தின் பின்னணி இசை மற்றும் இசையமைப்பு எப்படி :

இந்த பாம் படமானது, ஃபீகுட் திரைப்படமாக அமைந்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்திருக்கும் நிலையில், அவரின் இசைஅயமைப்பில் பின்னணி இசையும் சரி, படத்தின் பாடல்களும் சரி பிரம்மதமாக வந்திருக்கிறதாம்.

இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜின் LCUவில் இணைந்த வாத்தி பட நடிகை.. வைரலாகும் போஸ்டர்!

பாம் படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா :

தமிழ் சினிமாவில் அர்ஜுன்தாஸி குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் அவரின் அசத்தல் நடிப்பில், இந்த பாம் படம் வெளியாகியுள்ளது. இவரின் நடிப்பும் இப்படத்தில் நன்றாக வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாம் படமானது எமோஷனல், திரடி நடிப்பு மற்றும் பீல் குட் படமாக வெளியாகியிருக்கிறது. பீல் குட் படத்தை பார்க்க நினைப்பவர்களுக்கு இந்த பாம் படம் நிச்சயமாக பிடிக்கும்.