Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Marshal : மார்ஷல் படத்தில் கார்த்திக்கு வில்லனாகும் பிரபல நடிகர்.. அட இவரா?

Marshal Movie Update : தமிழ் சினிமாவில் கார்த்தியின் 29வது திரைப்படமாக உருவாகிவருவது மார்ஷல் திரைப்படம். இப்படத்தை டாணாக்காரன் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தமிழ் இயக்கிவருகிறார். இவரின் இயக்கத்தில் கடல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகிவரும் இப்படத்தில், கார்த்திக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்கவுள்ளாராம். அவர் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

Marshal : மார்ஷல் படத்தில் கார்த்திக்கு வில்லனாகும் பிரபல நடிகர்.. அட இவரா?
கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் கார்த்தி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Sep 2025 21:46 PM IST

நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக மெய்யழகன் (Meiyazhagan) திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது திரையரங்குகளில் பெருமளவிற்கு வரவேற்பை பெறாவிட்டாலும், ஓடிடியில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்து கார்த்தி, வா வாத்தியார் (Vaa Vaathiyaar) மற்றும் சர்தார் 2 (Sardar 2) என இரு படங்களில் நடித்துவந்தார். இந்த இரு திரைப்படங்களின் ஷூட்டிங் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. இந்நிலையில், இந்த படங்களை அடுத்து தற்போது நடிகர் கார்த்தி, இயக்குநர் தமிழ் (Tamizh) இயக்கத்தில் மார்ஷல் (Marshal) என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் தமிழ், ஏற்கனவே விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியான “டாணாக்காரன்” (Taanakkaran) என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் வரவேற்பை அடுத்தாதாக, கார்த்தியுடன் இந்த மார்ஷல் படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் கார்த்தியுடன் சத்யராஜ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்த நடித்துவரும் நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக, நடிகர் வடிவேலு (Vadivelu) நடிக்கவுள்ளாராம். ஆனால் இது குறித்த எந்த தகவல்களையும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : துல்கர் சல்மானின் காந்தா பட ரிலீஸ் ஒத்திவைப்பு.. காரணம் இதுதானா?

மார்ஷல் படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு :

கார்த்தியின் இந்த மார்ஷல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். மேலும் அவர்களுடன் நடிகர் சத்யராஜும் மிக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கார்த்தியின் இந்த படத்தை இயக்குநர் தமிழ் இயக்கும் நிலையில், ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

இதையும் படிங்க : எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ அவர்தான் – கல்யாணி பிரியதர்ஷன் சொன்னது யார் தெரியுமா?

மார்ஷல் படத்தின் கதைக்களம்

இந்த மார்ஷல் படமானது உண்மையாக சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படமானது கடல் மற்றும் கடல் கிராம மக்கள் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகிவருகிறதாம். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஜூலை மாதம் முதல் தொடங்கியிருக்கும் நிலையில், தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த மார்ஷல் படத்தில் மேலும் நடிகர் வடிவேலு வில்லனாக நடிக்கவுள்ளார் என கூறப்படும் நிலையில், நிச்சயமாக இப்படம் மிக பிரம்மாண்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.