AK 64 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் தெரியுமா? வைரலாகும் தகவல்
AK 64 Movie: நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக AK 64 என்று அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar)நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே அடுத்தடுத்து இரண்டு படங்கள் வரிசையாக வெளியானது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியானது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்ததை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் படம் ஹாலிவுட் தரத்தில் இருந்ததாகவும் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து அடுத்ததாக ஏப்ரல் மாதம் அஜித் குமார் நடிப்பில் குட் பேட் அக்லி படம் திரையரங்குகளில் வெளியானது.
அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இதற்கு முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




AK 64 படம் குறித்து வைரலாகும் முக்கிய தகவல்:
குட் பேட் அக்லி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. அதன்படி அஜித்தின் 64-வது படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… குட் பேட் அக்லி படத்தில் வில்லனா நடிக்க ஒரே காரணம் இதுதான் – அர்ஜுன் தாஸ் சொன்ன சீக்ரெட்
இணையத்தில் கவணம் பெறும் எக்ஸ் தள பதிவு:
– The shoot of #AK64 is set to commence from the end of October or the beginning of November.
– #Mohanlal, #Sreeleela, and #Swasika are in talks for the casting.
– #Anirudh might compose the music for the film. pic.twitter.com/p0VidxMyLO— Movie Tamil (@_MovieTamil) September 11, 2025
Also Read… நடிகர்களே பாட்டு பாடிட்டா சிங்கர்ஸ்க்கு வாய்ப்பு இல்லாம போகுதே – வைரல் பாடகர் சத்யன் சொன்ன விசயம்!