இட்லி கடை படத்தில் மாரிசாமியாக நடிக்கும் சமுத்ரகனி – வைரலாகும் போஸ்டர்
Actor Samuthirakani: சின்னத்திரையில் பல ஹிட் சீரியல்களை இயக்கிய பிறகு வெள்ளித்திரைக்கு இயக்குநராக வந்து தற்போது நடிகராக தென்னிந்திய மொழிகளில் கலக்கி வருகிறார் சமுத்ரகனி. இவர் தனுஷின் இட்லி கடைப் படத்தில் நடித்துள்ள நிலையில் அவரின் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சின்னத்திரையில் பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் சமுத்ரகனி (Samuthirakani). இவர் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து நெரஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2 மற்றும் வினோதய சித்தம் என பலப் படங்களை தமிழ் சினிமாவில் இயக்கியுள்ளார். சமுத்ரகனி தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் படங்களை இயக்கி உள்ளார். தொடர்ந்து படங்களை இயக்கி வந்த சமுத்ரகனி 2001-ம் ஆண்டு முதல் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடிக்கவும் செய்தார். தொடர்ந்து 2008-ம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் இருந்து படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்திலும், நாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில் படங்களை இயக்குவதை விட அதிக அளவில் சமுத்ரகனி நடிகராக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் பலப் படங்களில் சமுத்ரகனி கமிட்டாகி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் இட்லி கடை.




தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் சமுத்ரகனி:
இந்த நிலையில் நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 52-வது படமான இட்லி கடை படத்தில் நடிகர் சமுத்ரகனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 1-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் போஸ்டர்களைப் படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.
முன்னதாக நடிகர்கள் அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் பார்த்திபன் ஆகியோரின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது நடிகர் சமுத்ரகனியின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் சமுத்ரகனி மாரிசாமியாக நடித்துள்ளது தெரியவந்துள்ளது.
இட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The experienced @thondankani returns as MARISAMY in #Idlikadai
Worldwide in theatres from October 1st.
Audio launch this Sunday – 14th September🎙️🔥#IdliKadaiCharacterIntroduction@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @DawnPicturesOff… pic.twitter.com/QhtqWRwwhO
— Wunderbar Films (@wunderbarfilms) September 10, 2025
Also Read… ரவி மோகன் பிறந்த நாள் ஸ்பெஷல்… போஸ்டர்களை வெளியிடும் படக்குழு!