Cinema Rewind : VIP படத்தில் சமுத்திரக்கனி கொடுத்த நம்பிக்கை.. வாத்தி படத்தில் அப்படியே மாறிட்டாரு.. நடிகர் தனுஷ் பேசிய விஷயம்!
Dhanush praises Director : Samuthirakani : தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும் இருந்து வருபவர் தனுஷ். இவர் தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் முன்பு ஒரு நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குனருடமான சமுத்திரக்கனியின் நடிப்பை பற்றிப் பேசிய விஷயம் குறித்து பார்க்கலாம்.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் (Kasthuri Raja) இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் துள்ளுவதோ இளமை. இந்தத் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகத்தான் நடிகர் தனுஷ் (Dhanush) சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தனது தந்தையின் படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது, அவரின் இயக்கத்திலே, அவரே கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இவரின் இயக்கத்தில் இதுவரை 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இட்லி கடை (Idly Kadai) என்ற திரைப்படத்தை இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் தனுஷ். இதைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் என இவரின் தரம் வளர்ந்துகொண்டேதான் போகிறது. தற்போது இவரின் நடிப்பில் இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishq Mein), குபேரா (Kuberaa) என மூன்று திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
மேலும் டி55 (D55) மற்றும் டான் பிக்ச்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனத்தின் கீழ் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். சினிமாவில் பல்வேறு பணிகளைச் சிறப்பாகச் செய்துவரும் தனுஷ், நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியை பற்றிப் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் வைத்து நடிகர் சமுத்திரக்கனியின் நடிப்பை பற்றிப் புகழ்ந்து பேசியிருப்பார். அதுகுறித்து முழுமையாகப் பார்க்கலாம்.
சமுத்திரக்கனியைப் பற்றி தனுஷ் பேசிய விஷயம் :
முன்பு திரைப்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ் , அதில் “சமுத்திரக்கனி அண்ணன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது, அப்போது அவர் 2 படங்களில் மட்டும்தான் நடித்திருந்தார். VIP படத்தில் நான் புகைப்பிடிக்கும்போது, அவர் என்னிடம் வந்து பேசும் காட்சியானது எனக்கு தற்போது வரையிலும் நினைவிருக்கிறது. அந்தச் சீனை சுமார் 2 முதல் 4 தடவை ரீ டேக் போனார். அப்போது எனக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருந்தார், எப்படியும் சமுத்திரக்கனியின் அண்ணனின் காட்சி மேலும் 4 டேக் வரைச் செல்லும் என்று.
ஆனால் அவர் அப்படியே வாத்தி படத்தில் மாறிவிட்டார். அந்தப் படத்தில் ஒரு பெரிய டயலாக் இருந்தது, எப்படியும் சமுத்திரக்கனி அண்ணன் அதிக டேக் எடுப்பார் என்று அசால்டாக இருந்தேன். ஆனால் அவர் வாத்தி படத்தில் அவ்வளவு பெரிய வசனத்தை ஒரே ஷாட்டில் கூறிவிட்டார். எனக்குப் பயங்கர ஷாக், நான் அவரைத் தான் நம்மியிருந்தேன், எப்படியும் 4 டேக் மேலே போவார் என. ஆனால் அவர் எளிதாகக் கூறிவிட்டார். தற்போது அண்ணன் சமுத்திரக்கனி இல்லாத தமிழ்ப் படங்களும் கிடையாது, அவர் இல்லாத தெலுங்கு படங்களும் கிடையாது” என நடிகரும், இயக்குனருமான சமுத்ரகனியைப் புகழ்ந்து பேசினார். இந்த பழைய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.