AR Murugadoss : அந்த வேடத்தில் கமல் சார் மட்டுமே பல படங்கள் பண்ணிட்டாரு.. ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன விளக்கம்
AR Murugadoss About Kamal Haasan : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரின் இயக்கத்தில் சமீபத்தில் மதராஸி படமானது வெளியாகியிருந்தது. மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய முருகதாஸ், கமல்ஹாசன் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தது குறித்து பேசியிருந்தார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR. Murugadoss) இயக்கி, சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் வெளியான திரைப்படம் மதராஸி (Madharaasi). இந்த படமானது கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்திருந்தார். இந்த படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று தற்போது வரையிலும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படமானது வெற்றிபெறவேண்டும் என்பதற்காக, ஏ.ஆர்.முருகதாஸ் பழனி முருகன் கோவிலில் தனது தலைமுடியை காணிக்கையாக கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் மதராஸி படத்தின் வெளியீட்டை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், கமல்ஹாசன் (kamal Haasan) , மனநிலை சரியில்லாத கதாபாத்திரத்தை போல பல படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் என அவரை புகழ்ந்துள்ளார். அவர் கமல்ஹாசனை பற்றி பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : விஜய்யின் ஜன நாயகனுடன் மோதுவது யார்? சூர்யாவின் கருப்பா? சிவகார்த்திகேயனின் பராசக்தியா?
கமல்ஹாசன் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு
அந்த நேர்காணலில் மதராஸி அப்படம் பற்றி பல விஷங்களை ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்திருந்தார். மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு மற்றும் வில்லனுடன் அவரின் சண்டைக்காட்சி என்பது பற்றியும் பேசியிருந்தார். மேலும் மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் பலமே நடிகை ருக்மணியின் கதாபாத்திரம்தான் என்று ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : ரவி மோகனின் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. புதிய படம் குறித்து வெளியாகும் அறிவிப்பு!
தொடர்ந்துபேசிய அவர்,” கமல்ஹாசன் சார் ஆளவந்தான் படத்தில், மதராஸி படம்போல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் தொடாத கதாபாத்திரமே கிடையாது. மனநிலை சரியில்லாதது போல உள்ள கதாபாத்திரத்தில் சுமார் 15 படங்களுக்குமேல் அவர் பண்ணிருக்காரு. இதில் மிச்ச மீதியைத்தான் நம்ம உருவாக்கிவருகிறோம்” என்று நடிகர் கமல்ஹாசன் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் புகழ்ந்து பேசியிருந்தார். மேலும் மதராஸியில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தின் வடிவமைப்புக்கு, கமல்ஹாசனின் ஆளவந்தான் படமும் ஒரு காரணம் என்று தெரிவித்திருந்தார்.
மதராஸி படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் எக்ஸ் பதிவு :
This scene on the big screens 🥹🥹🥹🥹
And the #Thangapoovey song in the background 🫶
Book your tickets now!
🎟️ https://t.co/DiYIeLe7q1#MadharaasiMadness #Madharaasi#BlockbusterMadharaasi pic.twitter.com/prWOyk1yQV— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) September 8, 2025
இந்த மதராஸி படமானது இரண்டு நாட்களில் உலகமெங்கும் சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வார இறுதியில் மொத்தமாக ரூ 85 கோடிகளை தொட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் மொத்தத்தில் இப்படமானது சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.