மோலிவுட் சினிமாவில் வரலாறு படைத்த லோகா? மகிழ்ச்சியில் படக்குழு!
Lokah Chapter 1 Chandra: மலையாள சினிமாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான படம் லோகா சாப்டர் 1 சந்திரா. சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் தற்போது உலக அளவில் 200 கோடிகள் ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோலிவுட் சினிமாவில் கடந்த 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு வெளியான படம் லோகா சாப்டர் 1 சந்திரா (Lokah Chapter 1 Chandra). சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து உலக அளவில் இந்தப் படத்திற்கு பல்வேறு இடங்களில் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து பல நாடுகளில் லோகா படத்தின் திரையரங்கு எண்ணிக்கைகள் அதிகரித்ததையும் படக்குழு தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தின் வசூல் குறித்த அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்தப் படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தான் சூப்பர் ஹீரோவாக நடித்து இருந்தார். சிறு வயதிலேயே வௌவால்கள் கடித்தபோது அவரது உடலில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. பின்பு அவருக்கு ஒரு அதீத சக்தி கிடைக்கிறது. அவரை சிலர் கடவுள் என்றும் சிலர் காட்டேரி என்றும் எப்படி வேண்டுமானாலும் அடையாளப்படுத்தும் நபராக இருக்கிறார். சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் 5 பாகங்களாக வெளியாகும் என்று முன்னதாக படக்குழு அறிவித்துள்ளதால் அடுத்தடுத்த பாகங்களின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.




உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூலித்தது லோகா படம்:
இந்தப் படத்தை நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் நிறுவனம் ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது. இந்த நிலையில் படம் வெளியானதில் இருந்து 13 நாட்களைக் கடந்த நிலையில் தற்போது படத்தின் வசூல் குறித்த தகவல் ஒன்று எக்ஸ் தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் படம் தற்போது வரை உலக அளவில் ரூபாய் 200 கோடிகள் வசூலித்துள்ளதாகவும் இது மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்தப் படங்களின் பட்டியலில் தற்போது 4-வது இடத்தில் உள்ளது என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
Also Read… நடிகை காஜல் அகர்வாலுக்கு விபத்தா? வைரலாகும் எக்ஸ் போஸ்ட்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
200 CRORES & COUNTING in just 13 days! 🌍✨#Lokah crosses 200 Cr globally with strong weekday momentum.
Thanks to all for this MEGA-BLOCKBUSTER! 🔥#LokahChapter1 #KothaLokah pic.twitter.com/FkPsRK6Vrb— Dulquer Salmaan (@_dulQuer) September 9, 2025
Also Read… ஐஸ்வர்யா ராய் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு