Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

9 வருடங்களைக் கடந்ததது இரட்டை வேடத்தில் விக்ரம் கலக்கிய இரு முகன் படம்

9 Years of Iru Mugan Movie: தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெறும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம். எந்த நடிகரின் ரசிகராக இருந்தாலும் விக்ரமை வெறுக்கும் ஆட்கள் யாரும் இல்லை என்பது போல சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார் நடிகர் விக்ரம்.

9 வருடங்களைக் கடந்ததது இரட்டை வேடத்தில் விக்ரம் கலக்கிய இரு முகன் படம்
இரு முகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Sep 2025 17:52 PM IST

கோலிவுட் சினிமாவில் எந்த நடிகரின் ரசிகராக இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயமாக நடிகர் சியான் விக்ரமை (Actor Chiyaan Vikram) பிடிக்கும். அதற்கு காரணம் அவர் நடிக்கும் படங்கள் மட்டும் இல்லை. அவரின் இயல்பான குணமும். இந்த சினிமாவில் பலர் எந்தவித உழைப்பும் இல்லாமல் நடித்துவிட்டு செல்லும் நிலையில் நடிகர் விக்ரம் மட்டும் ஒரு படத்திற்காக உடல் எடையை கூட்டுவது, குறைப்பது என மிகவும் மெனக்கெடுவார். அது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் அவர் மீதான மரியாதையை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வீர தீர சூரன். ஆக்‌ஷன் ரொமாண்டிக் பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் விக்ரமின்  ஆக்‌ஷன் காட்சிகளுக்கு திரையரங்கே அதிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தப் படத்தை தொடர்ந்து தற்போது 3 படங்களில் அடுத்தடுத்து நடிகர் விக்ரம் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் முன்னதாக இரட்டை வேடத்தில் நடித்த இருமுகன் படம் கடந்த 08-ம் தேதி செப்டம்பர் மதாம் 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் இன்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

9 ஆண்டுகளை நிறைவு செய்த இரு முகன் படம் – கொண்டடும் ரசிகர்கள்:

இயக்குநர் ஆனந்த் சங்கர் எழுதி இயக்கிய படம் இரு முகன். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடிக்க நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். அதில் ஒரு விக்ரம் நாயகனாகவும் மற்றொரு விக்ரம் வில்லனாகவும் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் நித்யா மேனன், நாசர், தம்பி ராமையா, கருணாகரன், ரித்விகா, கார்த்திக் நாகராஜன், பாலாஜி வேணுகோபால் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.

Also Read… அனஸ்வராவின் அந்தப் படத்தப் பார்த்ததில் இருந்து நான் இயக்கும் படத்தில் அவரைதான் நாயகியாக்க வேண்டும் என்று நினைத்தேன் – இயக்குநர் சொன்ன விசயம்!

இரு முகன் படம் குறித்து வெளியான எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓடிடியில் வெளியான பிக்பாஸ் ராஜுவின் பன் பட்டர் ஜாம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!